/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தலைவராக இருப்பதால் கட்சி என் சொத்தா? துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
/
தலைவராக இருப்பதால் கட்சி என் சொத்தா? துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
தலைவராக இருப்பதால் கட்சி என் சொத்தா? துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
தலைவராக இருப்பதால் கட்சி என் சொத்தா? துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
ADDED : டிச 21, 2025 05:19 AM

பெங்களூரு: ''நான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், சில அமைப்புகளின் தலைவராகவும் இருப்பதால் அவைகள் எல்லாம் என் சொத்தாகுமா?'' என, துணை முதல்வர் சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடந்த, 'சத்யமேவ ஜெயதே' போராட்டத்தில், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
பெலகாவிக்கு, 100 ஆண்டுகளுக்கு முன் வந்திருந்த மஹாத்மா காந்தி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அப்போதைய அரசு, காந்தி பெயரில் கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், கிராமப்புற மக்கள் பயன் பெற்றனர். தற்போதைய மத்திய அரசு, அத்திட்டத்தில் உள்ள காந்தியின் பெயரை நீக்கி உள்ளது.
பா.ஜ.,வுக்கு தைரியம் இருந்தால், ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை அகற்றட்டும். காந்தி சிலை முன் நின்று போராடும் தகுதியை அக்கட்சியினர் இழந்து விட்டனர். 'காந்தியின் இந்தியா'வை, 'கோட்சேவின் இந்தியா'வாக மாற்ற காங்கிரஸ் அனுமதிக்காது. மற்ற நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்தியாவுக்கு வந்தால், காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர்.
நேஷனல் ஹெரால்டு நாட்டின் சொத்து. இது, சோனியா, ராகுலின் சொத்து அல்ல. சில பங்குகள் சோனியா, ராகுல், மோதிலால் ஓரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் பெயரில் இருப்பதால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் மாநில தலைவராகவும், சில அமைப்புகளின் தலைவராகவும் இருக்கிறேன். அதனால், அது எல்லாம் என் சொத்தாகுமா?
என் மீது போலி வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பினர். தற்போது, புதிய எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.

