/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராமநாதபுரம், நெல்லை, காரைக்குடிக்கு மைசூரில் இருந்து தசரா சிறப்பு ரயில்கள்
/
ராமநாதபுரம், நெல்லை, காரைக்குடிக்கு மைசூரில் இருந்து தசரா சிறப்பு ரயில்கள்
ராமநாதபுரம், நெல்லை, காரைக்குடிக்கு மைசூரில் இருந்து தசரா சிறப்பு ரயில்கள்
ராமநாதபுரம், நெல்லை, காரைக்குடிக்கு மைசூரில் இருந்து தசரா சிறப்பு ரயில்கள்
ADDED : செப் 12, 2025 06:53 AM
பெங்களூரு: 'தசராவை முன்னிட்டு, மைசூரிலிருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி, காரைக்குடி இடையே வரும் 15ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என, தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண்: 06237: மைசூரு - ராமநாதபுரம் விரைவு ரயில், வரும் 15ம் தேதி முதல் திங்கிட்கிழமை தோறும் மைசூரில் இருந்து மாலை 6:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும். இந்த ரயில் அக்., 27ம் தேதி வரை இயங்கும்.
மறுமார்க்கத்தில் 06238: ராமநாதபுரம் - மைசூரு விரைவு ரயில், ராமநாதபுரத்தில் இருந்து வரும் 16ம் தேதி முதல் செவ்வாய் தோறும் மாலை 3:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூரு வந்தடையும். இந்த ரயில்கள் அக்., 28ம் தேதி வரை இயங்கும்.
எண் 06239: மைசூரு - திருநெல்வேலி விரைவு ரயில், மைசூரில் இருந்து 15ம் தேதி முதல் திங்கட்கிழமை தோறும் இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் நவ., 24ம் தேதி வரை இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில், எண் 06240: திருநெல்வேலி - மைசூரு விரைவு ரயில், திருநெல்வேலியில் இருந்து வரும் 16ம் தேதி முதல் செவ்வாய் தோறும் மாலை 3:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:40 மணிக்கு மைசூரு வந்தடையும். இந்த ரயில் நவ., 25ம் தேதி வரை இயக்கப்படும்.
காரைக்குடி எண் 06243: மைசூரு - காரைக்குடி விரைவு ரயில், மைசூரில் இருந்து வரும் 18 ம் தேதி முதல் வியாழன், சனிக்கிழமை தோறும் இரவு 9:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:00 மணிக்கு காரைக்குடி சென்றடையும். இந்த ரயில் நவ., 29ம் தேதி வரை இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் எண் 06244: காரைக்குடி - மைசூரு விரைவு ரயில், காரைக்குடியில் இருந்து வரும் 19ம் தேதி முதல் காரைக்குடியில் இருந்து வெள்ளி, ஞாயிறு தோறும் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு மைசூரு வந்தடையும். இந்த ரயில் நவ., 30ம் தேதி வரை இயக்கப்படும்.
எண் 06283: எஸ்.எம்.வி.டி., பெங்களூரு - மைசூரு ரயில், வரும் 27 ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை எஸ்.எம்.வி.டி.,யில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு, 7:50 மணிக்கு மைசூரு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் எண் 06284: மைசூரு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில், வரும் 27 ம் தேதி அக்., 2ம் தேதி வரை மைசூரில் இருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு, 10:50 மணிக்கு எஸ்.எம்.வி.டி.,க்கு வந்தடையும்.
எண் 06285: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - அசோகபுரம் ரயில், வரும் 27 ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து காலை 11:00 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2:15 மணிக்கு அசோகபுரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் எண் 06286: அசோகபுரம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில், வரும் 27 ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை அசோகபுரத்தில் இருந்து மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:20 மணிக்கு கே.எஸ்.ஆர்., பெங்களூரு வந்தடையும்.
மைசூரு எண் 06287: கே.எஸ்.ஆர்., பெங்களூரு - மைசூரு ரயில், வரும் 27 ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை கே.எஸ்.ஆர்., பெங்களூரில் இருந்து இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு, 10:40 மணிக்கு மைசூரு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் 06288: மைசூரு - எஸ்.எம்.வி.டி., பெங்களூரு ரயில், வரும் 27 ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை மைசூரில் இருந்து இரவு 10:55 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3:30 மணிக்கு எஸ்.எம்.வி.டி., வந்தடையும்.
எண் 06295: அரிசிகெரே - மைசூரு ரயில் வரும் 27 முதல் அக்., 2 வரை அரிசிகெரேயில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு மைசூரு சென்றடையும்.
மறு மார்க்கத்தில், எண் 06296: மைசூரு - அரிசிகெரே ரயில் வரும் 27 முதல் அக்., 2ம் தேதி வரை மைசூரில் இருந்து மாலை 6:50 மணிக்கு புறப்பட்டு இரவு 11:45 மணிக்கு அரிசிகெரே சென்றடையும்.
எண்: 06293: மைசூரு - சாம்ராஜ் நகர் ரயில், வரும் 27 முதல் அக்., 2 வரை மைசூரில் இருந்து இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு, 11:20 மணிக்கு சாம்ராஜ் நகர் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் எண் 06294: சாம்ராஜ் நகர் - மைசூரு ரயில், வரும் 27 ம் தேதி முதல் அக்., 2 வரை சாம்ராஜ் நகரில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 1:50 மணிக்கு மைசூரு சென்றடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.