/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆட்டோ மோதி ஒருவர் பலி ஓட்டுநருக்கு ரூ.1.41 கோடி அபராதம்
/
ஆட்டோ மோதி ஒருவர் பலி ஓட்டுநருக்கு ரூ.1.41 கோடி அபராதம்
ஆட்டோ மோதி ஒருவர் பலி ஓட்டுநருக்கு ரூ.1.41 கோடி அபராதம்
ஆட்டோ மோதி ஒருவர் பலி ஓட்டுநருக்கு ரூ.1.41 கோடி அபராதம்
ADDED : ஏப் 23, 2025 07:45 AM

கொப்பால்: அலட்சியமாக ஆட்டோ ஓட்டி, நபரின் இறப்புக்கு காரணமான ஓட்டுநருக்கு கொப்பால் நீதிமன்றம் 1.41 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், ஜெயநகரில் வசித்தவர் ராஜசேகர் அய்யன கவுடா, 52. இவர் யலபுர்காவின், அரசு பி.யு., கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணியாற்றினார்.
இவர் 2021ல் பணி முடிந்த பின், கங்காவதி நகரின், ஸ்வஸ்திகா கம்ப்யூட்டர் அருகில் பைக்கை நிறுத்தி, மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மஹந்தேஷ் மாதங்கப்பா, 21, என்பவர் அலட்சியமாக ஆட்டோ ஓட்டி வந்து, ராஜசேகர் அய்யன கவுடா மீது மோதினார். காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
கணவரின் இறப்புக்கு நிவாரணம் பெற்றுத் தரும்படி கோரி, இவரது மனைவி சென்னம்மாவும், பிள்ளைகளும் கங்காவதியின் சிவில் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.
விசாரணையில் ஆட்டோ ஓட்டுநரின் குற்றம் உறுதியானது. இவரால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு 1.41 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, நீதிபதி ரமேஷ் கானிகேரா நேற்று தீர்ப்பளித்தார்.

