/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலாவில் தொடரும் ஏமாற்றம் எஸ்.ஐ.டி.,க்கு கூடுதல் அதிகாரம்
/
தர்மஸ்தலாவில் தொடரும் ஏமாற்றம் எஸ்.ஐ.டி.,க்கு கூடுதல் அதிகாரம்
தர்மஸ்தலாவில் தொடரும் ஏமாற்றம் எஸ்.ஐ.டி.,க்கு கூடுதல் அதிகாரம்
தர்மஸ்தலாவில் தொடரும் ஏமாற்றம் எஸ்.ஐ.டி.,க்கு கூடுதல் அதிகாரம்
ADDED : ஆக 09, 2025 04:54 AM
மங்களூரு: தர்மஸ்தலாவில் புதிய இடத்தில் தோண்டும் பணிகள் நடந்தன. ஆனால், எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் அடையாளம் காணப்பட்டதில், ஏற்கனவே 12 இடங்கள் தோண்டப்பட்டன.
நேற்று கடைசி இடமான 13வது இடம் தோண்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு பள்ளம் தோண்டப்படவில்லை.
புதிதாக தர்மஸ்தலா கிராமத்துக்கு அருகில் உள்ள போலியார் கிராமத்தில் நான்கு இடங்களை புகார்தாரர் அடையாளம் காண்பித்தார்.
இந்த நான்கு இடங்களிலும் மனித எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், புகார்தாரர் தன் முடிவில் உறுதியாக இருப்பதால், இன்றும் தோண்டும் பணிகள் நடக்கும் என தெரிகிறது.
எஸ்.டி.ஐ., அதிகாரிகள் குழுவிற்கு போலீஸ் நிலைய அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய வழக்குகள் பதிவு செய்ய, கைது செய்ய, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, தனக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் அடையாளம் தெரியாத புகார்தாரர் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

