/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாவணகெரே தெற்கு தொகுதி ஜே.எச்.படேல் மகன் 'துண்டு'

 தாவணகெரே தெற்கு தொகுதி ஜே.எச்.படேல் மகன் 'துண்டு'

 தாவணகெரே தெற்கு தொகுதி ஜே.எச்.படேல் மகன் 'துண்டு'

 தாவணகெரே தெற்கு தொகுதி ஜே.எச்.படேல் மகன் 'துண்டு'

 தாவணகெரே தெற்கு தொகுதி ஜே.எச்.படேல் மகன் 'துண்டு'

ADDED : மார் 11, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை, கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேல் மகன் சந்தித்தார். தாவணகெரே தெற்கு தொகுதியில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிட தனக்கு சீட் வாங்கி வரும்படி கோரிக்கை வைத்தார்.

தாவணகெரே தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த காங்கிரசின் சாமனுார் சிவசங்கரப்பா மறைவால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தொகுதியில் போட்டியிட சீட் வாங்குவதற்கு, பா.ஜ.,வில் கடும் போட்டி எழுந்து உள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரசிலும் அதே நிலை தான் உள்ளது.

இந்நிலையில், மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேலின் மகனும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவருமான மஹிமா படேல், தாவணகெரே தெற்கில் பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிட ஆசைப்படுகிறார்.

நேற்று முன்தினம் பீஹார் சென்ற மஹிமா படேல், பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்தார். பா.ஜ., மேலிட தலைவர்களிடம் பேசி தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வாங்கி வரும்படி கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நிதிஷ் குமார், பா.ஜ., தலைவர்களிடம் பேசுவதாக மஹிமா படேலுக்கு உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -