/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்களுக்கு பயன் அளிக்காத 'மாநகராட்சி பஜார்' கடைகள்
/
மக்களுக்கு பயன் அளிக்காத 'மாநகராட்சி பஜார்' கடைகள்
மக்களுக்கு பயன் அளிக்காத 'மாநகராட்சி பஜார்' கடைகள்
மக்களுக்கு பயன் அளிக்காத 'மாநகராட்சி பஜார்' கடைகள்
ADDED : மே 01, 2025 05:37 AM

பெங்களூரு: விஜயநகரில் பெங்களூரு மாநகராட்சி கட்டிய, தென்னகத்தின் முதல் சுரங்க மார்க்கெட்டான 'மாநகராட்சி பஜார் ' திறக்கப்பட்டு எட்டு மாதங்கள் கடந்தும் பொது மக்களுக்கு பயன்படவில்லை.
பெங்களூரின், விஜயநகரில் டில்லியில் இருப்பதை போன்ற, சுரங்க மார்க்கெட்டை, பெங்களூரு மாநகராட்சி கட்டியுள்ளது. இது தென் மாநிலங்களிலேயே முதல் சுரங்க மார்க்கெட்டாகும். பணிகள் துவங்கி, பல இடையூறுகளை கடந்து, எட்டு ஆண்டுகளுக்கு பின் பணிகள் முடிந்தன. 2024ன் ஆகஸ்ட் 25ம் தேதி முதல்வர் சித்தராமையா, 'மாநகராட்சி பஜார்' மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
திறந்து வைக்கப்பட்டு எட்டு மாதங்கள் கடந்தும், கடைகள் காலியாக உள்ளன. பொது மக்களுக்கு சரியாக பயன்படவில்லை. மாநகராட்சி பஜாரில், 13 கோடி ரூபாய் செலவில் 79 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இது அதி நவீன பஜாராகும். இரண்டு எஸ்கலேட்டர்கள், லிப்டுகள், 26 உள் வளாகம், ஐந்து வெளி வளாகம், சென்சர் கொண்டுள்ள மூன்று கிளாஸ் ஸ்லைடிங் டோர்கள் என, அனைத்து வசதிகளும் உள்ளன.
ஒவ்வொரு கடைகளிலும், தீயணைப்பு சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஸ்டோர் ரூம், எலக்ட்ரிகல் ரூம் என, ஹைடெக் வசதிகள் கொண்டுள்ளன. ஆனால், மக்களுக்கு பயன்படவில்லை. ஒரு எஸ்கலேட்டர் மட்டும் செயல்படுகிறது.
மற்றொன்று மூடப்பட்டுள்ளது. எஸ்கலேட்டர் அருகில் பொருத்தப்பட்ட கிரில்கள் தளர்ந்துள்ளன. மழை பெய்யும் போது சில கடைகள் ஒழுகுகின்றன. தண்ணீர் தொட்டி பாசி படிந்து நாற்றமெடுக்கிறது.
பெங்களூரு மாநகராட்சி பஜாரில் 79 கடைகள், டெண்டர் அழைத்து பகிர்ந்தளித்து, வாடகை நிர்ணயிக்க வேண்டும். சில கடைகள் விஷயத்தில் நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால், கடைகளை வாடகைக்கு விட முடியவில்லை.
இதற்கிடையே சில வியாபாரிகள் விதிமீறலாக கடைகளை ஆக்கிரமித்து, வியாபாரம் செய்கின்றனர். அவர்களுக்கும் வியாபாரம் சரியாக நடப்பது இல்லை. சிலர் கடைகளை குடோன்களாக பயன்படுத்துகின்றனர். தினமும் காலை பொருட்களை கொண்டு செல்கின்றனர். மாலை மிச்சமாகும் பொருட்களை மீண்டும் கொண்டு வந்து வைக்கின்றனர்.
மாநகராட்சி பஜார் சரியான நிர்வகிப்பு இன்றி, துாசி படிந்து கிடக்கிறது. ஆங்காங்கே குப்பை குந்துள்ளது. மதுபான பாக்கெட்டுகள் நிறைந்து கிடக்கின்றன. கடைகள் விதிமீறலாக பயன்படுத்துவது தெரிந்தும், அதிகாரிகள் மவுனமாக உள்ளனர்.
மாநகராட்சி பஜாரின் சில கடைகளில், விஜயநகரா காங்கிரஸ் எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா, தனக்கு வேண்டப்பட்டவர்கள் வியாபாரம் செய்ய வாய்ப்பளித்ததாக கூறப்படுகிறது. இந்த கடைகளில் கிருஷ்ணப்பா மற்றும் அவரது மகனின் படங்கள் தென்படுகின்றன.

