sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 செக் போஸ்ட்

/

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : மார் 18, 2026 05:40 AM

Google News

ADDED : மார் 18, 2026 05:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவசியம் கவனிக்க வேண்டும்!

கோ ல்டு சிட்டியின் பழமையான கோர்ட்டில், கழிப்பறை வசதி என்பது பொதுமக்களுக்கு பெரிய பிரச்னை. இதன் பேரிலும் சமூக அக்கறை காட்டுவாங்களா.

ஏற்கனவே, இதே கோர்ட்டு வளாகத்தில் கழிப்பறை அமைக்க இருந்ததாம். அதை, வட்டார நிர்வாக அலுவலகத்துக்கு இடம் மாற்றி விட்டதா அதிருப்தியும் இருக்குது.

அந்த நவீன கழிப்பறை கூட பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படல.

கோர்ட் வளாகத்தில் புதுசா ஒரு கழிப்பறையை கட்ட பொதுப் பணித்துறை ஒப்புதல் கொடுத்திருக்கு. அதற்கான பணியை துவக்க உரிய தொகையை எப்போ வழங்கப் போறாங்களோ. கோர்ட்டுக்கு வருகிறவங்க இயற்கை உபாதைகளை கழிக்க மறைவிடத்தை தேடிப் போறாங்க. பக்கத்தில் இருக்கிற பூங்கா இதுக்கு தான் யூஸ் ஆகுது.

சமூக நீதி, சுகாதாரம் சுற்றுப்புற சூழல், வசதிக்கு நியாயம் பேசுறவங்க கழிப்பறைக்கும் கவனம் செலுத்தலாமே.

அலட்சியம் காட்டலாமா?

கோ ல்டு நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தில், பாதுகாப்பு இல்லாமல் கல் குவாரியில் பாறையை பிளக்க வெடி வைத்தாங்க. இதில், 'மிஸ் பயர்' ஆகி பின்னர் வெடித்ததில்

மூன்று தொழிலாளர் படுகாயம் அடைந்தாங்க. தீவிர சிகிச்சை பிரிவில் அவர்களை அனுமதித்தும் ஒருத்தர் இறந்து விட்டார். வெளி மாநில ஒப்பந்ததாரர் சுரங்க தொழில் நுட்பம் அறியாமல், வெடி வைக்க அறிவியல் பயன்படுத்தாமல், ஜெலட்டின் குச்சிகளை கொளுத்திப் போட்டு 'இறப்பை' அறிய வெச்சிட்டாரே.

கடுமையா உழைக்கிற தொழிலாளர்களுக்கு 'இன்சூரன்ஸ்' அவசியம் என்பதை இப்போவாவது தெரிஞ்சிக்குவாங்களா.

கல் குவாரி தொழிலில் லாபம் மட்டுமே குறிக்கோளாக இருக்கிற முதலாளிகள், உயிரின் மதிப்பில் அலட்சியம் காட்டலாமா. அடிக்கடி மாலூரின் டேக்கல் மலையில் தான் கல் குவாரி விபத்தில் இறப்பு கணக்கு காட்டுவாங்க. இப்போ கோல்டு சிட்டியிலும், பலி கவுண்ட் தொடங்கிட்டாங்களே..

தேடினால் கிடைக்குமா?@

@ உ ரிகம் ரயில் நிலையம் பக்கத்தில், 'ரயில்வே கேட்' இருக்கிறது. ரயில்கள் வந்து போகும் போதெல்லாம் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது.

இங்கு ரயில்வே மேம்பாலம் கட்டுவதாக, சுமாரா பத்து சர்வே எடுத்தாங்க. இதுக்கு சாத்தியம் இல்லையென பொறியியல் தெரிந்த வங்க சொல்லிட்டாங்களாம்.

அதனால், சுரங்க பாலம் கட்டுவதாக, அதற்கும் சர்வே நடத்தினாங்க. இப்படியே, 30 வருஷமா சொன்னது சொன்ன படியே இருக்குது. இதில், அவ்வப்போது பூமி பூஜையும் நடத்தினாங்க. இன்னும் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கல.

மத்திய ரயில்வே மந்திரிகளா இருந்தவங்க காதுக்கு எட்டலன்னு சொல்ல சான்ஸே இல்லை. ஆனாலும் இந்த உரிகம் ரயில் நிலைய 'பாலம்' அவிழ்க்க முடியாத விடுகதையா இருந்து வருது. பழைய பவுரிங் பேட்டை ரயில் நிலையம் ஹைடெக் வசதியில் தரத்தை உயர்த்தி காட்டுது. மிக பழமையான உரிகம் ரயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, ஓய்வறை, எங்கே தேடுங்கள் கிடைக்கிறதா பார்ப்போம். இதனை புதுப்பிக்க பல லட்சம் ரூபாய் செலவழிச்சதா கணக்கு காட்டுறாங்களே.

சும்மா கிடக்கும் 7,000 ஏக்கர்!

கோ ல்டு மைனிங்குக்கு சொந்தமாக, 12,000 ஏக்கர் நிலம் இருப்பதாக, 100 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வர்றாங்க. அதில், குடியிருப்பு பகுதிகளில் 5000 இருப்பது ஏக்கர் பற்றி தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறவங்க நோட்டம் இருக்குதே தவிர, மற்ற, 7,000 ஏக்கர் நிலம் எங்கே என யோசிப்பதாக தெரியல. கோல்டு விலையை போல நிலத்தின் விலையும் எகிறும் போது, நிலம் சுருட்டும் மாபியா கும்பலுக்கு பின்பலம் யார்.

இந்த நிலங்களை விளை நிலங்களாக, மாநில வருவாய் துறையில் பட்டா பதிவும் செய்திருப்பதா சொல்லப் படுகிறதே. ஏன் அந்த ஆக்ரமிப்பை தடுக்கல. அதற்கான ஆக் ஷன் ஏன் எடுக்கல. பெமல் வசம் பயன் படுத்தாமல் இருந்த, 1000 ஏக்கர் நிலத்தை மாநில அரசு, தொழிற் பேட்டை அமைக்க வாங்கிட்டாங்களே.

அதேபோல கோல்டு மைன்சின் பயன்படுத்தாமல் உள்ள இந்த 7,000 ஏக்கர் நிலத்தை மத்திய, மாநில அரசுகள் விட்டு வைத்து வேடிக்கை பார்க்கலாமா என்று விபரம் அறிந்தவங்க விமர்சிக்கிறாங்க.






      Dinamalar
      Follow us