sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 செக் போஸ்ட்

/

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்

 செக் போஸ்ட்


ADDED : மார் 17, 2026 06:07 AM

Google News

ADDED : மார் 17, 2026 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபசகுனங்கள் நீக்கம்?

க டந்த ஐந்தாண்டு முனிசி., நிர்வாகத்தில், எங்கும் ஊழல் என்ற கூக்குரல் ஒலித்தது. ஆளும் அதிகாரம் கை-யிடம் இருந்ததால், முறைகேடுகளுக்கு நியாயம் பேசப்பட்டது.

ஊழலுக்கு உடன்படாத முனிசி.,யின் ஸ்ட்ரிக்ட் ஆபீசர்கள், 10 பேரை நிலைத்து நிற்க விடாமல் ஓட்டிட்டாங்க. கை கட்சியில் சீனியர்கள் இருந்தும், பல கட்சி தாவுவதில் எக்ஸ்பர்ட்டான நபரை பலிகடாவாக்கி, அவரின் அதிகாரம் முடிந்த பின் மாற்று கட்சிக்கு தானாக ஓட செய்திட்டாங்க.

கைகட்சியில் பேருக்கு சீனியர் என்ற அடை மொழியில் இருந்தும், அவர்கள் சில்லரைக்கு உடன் படுவார்கள் என்பதால், இப்பவும் சிலரை கறிவேப்பிலை யா பயன்படுத்தப் படுவதாக பேச்சு ஓடிக்கொண்டிருக்குது.

முனிசி., தேர்தல் வரப்போகுது. கட்சியில் அபசகுனங்களா இருக்கிற சில பேரை கழித்து தள்ள, இம்முறையும் கை கட்சி கண்ட்ரோலர் திட்டமிட்டிருக்கிறார்.

சிலர் கட்சி செல்வாக்கை விட சொந்த பலத்தை நம்பி, களம் இறங்கி ஜெயித்து காட்ட கோதாவில் இறங்க போவதாக சொல்றாங்க. ஏற்கனவே, ' ஹென்றீஸ்' வார்டு இதற்கு சாட்சியானது.

சிலைகளின் ஆயுள் எவ்வளவு?

மு னிசி., காம்பவுண்டில் சட்ட பிதா சிமென்ட் சிலையை அகற்றி, உலோக சிலை வைக்க, 15.05 லட்சம் நிதி ஒதுக்கினாங்க. இரண்டு வருஷம் முடிந்தும், டெண்டர் எடுத்தவர் பணியை செய்து முடிக்கல. யாருடைய பெயரில் டெண்டர் ஆனதோ, அவருக்கும், இந்த கான்ட்ராக்ட்டுக்கும் சம்மந்தமே இல்லையாம். அவர் பெயரில் யாரோ தில்லாலங்கடி வேலை செய்து, தன் பெயரை கெடுக்கும், உள்வேலையை செய்திருக் காங்கன்னு அவர் புலம்புறாரு.

இதேபோல, ஆ.பேட்டை பஸ் நிலையத்தில், 27 ஆண்டுகளாக பீடத்தில் நிற்க வைத்துள்ள மாஜி பி.எம்., சிமென்ட் சிலையையும் மாற்ற அதே முனிசி., யில் தீர்மானம் நிறைவேற்றினாங்க. ஆனால், அந்த சிலையை நிறுவினது தனியார். அதனால், அதனை மாற்ற முடியாது. இந்த ஒரு சிலையை மாற்ற வேண்டுமானால் கோல்டு சிட்டியில் உள்ள, 15 சிமென்ட் சிலைகளையும் உலோக சிலைகளாக மாற்ற வேணும்னு ஆணையரா இருந்த ஒருத்தர் அசெம்பிளி மேட்டுக்கு காதோரும் போய் சொல்லி, அந்த திட்டத்தை கைவிட வெச்சிட்டாராம்.

கோல்டு சிட்டியில் சிமென்ட் சிலைகள் படாதபாடு படுகிறது. இவைகளின் ஆயுள் இன்னும் எத்தனை காலமோ.

கையாடல் கதை வேணுமா?

மு னிசி.,யில், கடந்த 5 ஆண்டு காலத்தில் பூச்சி மருந்து, பினாயில் தெளிப்பு முதல் இ.காத்தா வரையில் பல, 'எல்' கையாடல் நடந்த கதைகளை தேர்தல் நடந்தால் பிரச்சாரமா சொல்ல போறாங்களாம். பூ காரங்க கடந்த முறை, 35 க்கு 3 பேர்; புல்லுக்கட்டு, 2 பேர் மட்டுமே எதிர்க்கட்சி. நீலக்கொடி பேருக்கு 2 அதில் ஒன்று கையுடன் இணைந்தாச்சு.

புல்லுக்கட்டு இரண்டுமே கை வளையத்தில் சேர்ந்தாச்சு. எந்த பிரச்னையும் கிளப்பாமல் இருக்க வாய்ச்சொல் வீரருக்கு வாயடைக்க, ஒவ்வொரு கூட்டத்துக்கும் வீடு தேடிப்போய் பட்டுவாடா செய்ததாகவும் சொல்றாங்க. இதுதான் கடந்த முனிசி.,யில் எதிர்க்கட்சி வேலையாக பார்க்க முடிஞ்சது.

இம்முறையும் முனிசி., எங்கள் 'கை' வசம் தான் என பந்தா பேச்சு நடனமாடுது. இப்பவே ஒவ்வொரு வார்டிலும் மூன்று பேரை போட்டியிட கை அதிகாரத்தில் உள்ளவரு தயார் படுத்திட்டாராம்.

எங்களை எதிர்க்கும் சக்தி யாருக்கும் இல்லையென மனப்பால் குடிக்கிறார்களாம். சொரணையுள்ளவங்க முனிசி.,க்கு தேர்வாக மாட்டார்களா என்று, ஜனங்க எதிர்பாக்குறாங்க.

சீரமைப்பை தடுக்கலாமா?

ச ட்டப்பிதா பெயரில் உரிகம் பகுதியில் உள்ள ஸ்டேடியம், காடு போல மரம் செடி கொடிகள் என வளர்ந்தும், முட்பதராக மாறியும் கிடக்குது.

இதனை சீர் செய்ய கனரக தொழிற்சாலையின், புல் டோசர்களை இயங்க வெச்சாங்க. ஓரிரு நாட்கள் மட்டுமே சீரமைக்கும் பணி நடந்தது.

இதை கவனித்த அதிகாரம் உள்ள மக்கள் பிரதிநிதி ஒருத்தரு தடுத்து நிறுத்திட்டாராம்.

இளைஞர்கள், போதையில் மிதப்பவர்களை திருத்த, அவர்களை விளையாட்டில் கவனம் செலுத்த, இந்த ஸ்டேடியம் உயிர்ப்பிக்க வேண்டிய வங்க, விளையாட்டு திடலை பாழ்படுத்திட்டாங்களேன்னு விஷயம் தெரிந்தவங்க கோபத்தை வெளிபடுத்துறாங்க.






      Dinamalar
      Follow us