/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலி டாக்டர்கள் மீது வழக்கு 120 கிளினிக்குகளுக்கு பூட்டு
/
போலி டாக்டர்கள் மீது வழக்கு 120 கிளினிக்குகளுக்கு பூட்டு
போலி டாக்டர்கள் மீது வழக்கு 120 கிளினிக்குகளுக்கு பூட்டு
போலி டாக்டர்கள் மீது வழக்கு 120 கிளினிக்குகளுக்கு பூட்டு
ADDED : செப் 16, 2025 05:05 AM
ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம் முழுதும் செயல்பட்டு வந்த, 120க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களது கிளினிக்குகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.
ராய்ச்சூரில் சுகாதார அதிகாரிகளுடன் எம்.எல்.சி., சரணகவுடா பய்யாபுரா ஆலோசனை நடத்தியபோது, போலி டாக்டர்கள், மக்களின் உயிரோடு விளையாடுவது குறித்து, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
சோதனை நடத்தி போலி கிளினிக்குகளுக்கு 'சீல்'வைக்கு ம்படி உத்தரவிட்டார்.
இதன்படி, சுகாதாரத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் ராய்ச்சூர் நகர் உட்பட, மாவட்டம் முழுதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, மருத்துவ கல்வி பெறாத பலர், கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை கண்டுபிடித்தனர். இத்தகைய கிளினிக்குகளுக்கு, 'சீல்' வைத்தனர். போலி டாக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராய்ச்சூர் மாவட்டம் முழுதும், 120க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். இவர்களின் கிளினிக்குகளுக்கு 'சீல்' வைத்துள்ளோம். போலி டாக்டர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்தகைய போலி டாக்டர்கள் விஷயத்தில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைந்த கட்டணம் பெறுகின்றனர் என, அவர்களிடம் சிகிச்சைக்கு செல்லக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.