/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்றுக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா
/
கன்றுக்குட்டிக்கு பெயர் சூட்டு விழா
ADDED : ஜன 01, 2026 06:07 AM

மைசூரு: மைசூரில் பசுவின் கன்றை தொட்டிலில் படுக்க வைத்து, அதற்கு பெயர் சூட்டும் விழா சிறப்பாக நடந்தது.
மைசூரில் உள்ள சாரதா விலாஸ் கல்லுாரிக்கு பின்புறம் மதுசூதனன் என்பவர், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் வீட்டில் பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பசுக்களை தெய்வமாக நினைத்து வழிபடுகின்றனர். இதற்காக, வீட்டின் கார் ஷெட்டை மாட்டு கொட்டகையாக மாற்றி விட்டனர். ஒவ்வொரு பசுவுக்கும் ஒரு பெயர் வைத்து வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சவுமியா என்ற பசு கன்றை ஈன்றது. இந்த கன்றுக்கு அக்குடும்பம் பெயர் வைக்கும் விழாவை சில நாட்களுக்கு முன் நடத்தியது. இதற்காக, வீட்டில் தொட்டில் அமைக்கப்பட்டது. அதில், கன்று படுக்க வைக்கப்பட்டது. கன்றின் காதில், 'சரயு' என மூன்று முறை கூறி பெயர் சூட்டப்பட்டது. இவ்விழாவுக்கு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்தனர். இது, பார்ப்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தியது.
குடும்ப உறுப்பினர்கள் கூறியதாவது;
எங்கள் வீட்டில் பசுக்களை குடும்ப உறுப்பினர்களாக கருதுகிறோ ம். பசுவின் கன்றுகளை குழந்தைகள் போல பராமரித்து வருகிறோம். முக்கோடி தேவர்களின் வடிவமாகவும், இருப்பிடமாகவும் இருக்கும் பசுக்களுக்கு சேவை செய்து வருகிறோம். இந்த சேவையை உறவினர்கள், அண்டை வீட்டார், பசு பக்தர்கள், நண்பர்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்பால், 'கோ சேவா டிரஸ்ட்' என்ற அமைப்பை நிறுவி, 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

