/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கட்டுமான தொழிலாளர் பிள்ளைகளுக்காக மாவட்டந்தோறும் உறைவிட பள்ளி
/
கட்டுமான தொழிலாளர் பிள்ளைகளுக்காக மாவட்டந்தோறும் உறைவிட பள்ளி
கட்டுமான தொழிலாளர் பிள்ளைகளுக்காக மாவட்டந்தோறும் உறைவிட பள்ளி
கட்டுமான தொழிலாளர் பிள்ளைகளுக்காக மாவட்டந்தோறும் உறைவிட பள்ளி
ADDED : ஜூலை 26, 2025 04:50 AM
பெங்களூரு: கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தலா ஒரு ஷ்ரமிகா உறைவிடப் பள்ளி திறக்க, தொழிலாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தொழலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கட்டுமான தொழிலாளர்களின் நலனுக்காக, மாநில அரசு பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தற்போது இவர்கள் பிள்ளைகளின் கல்விக்காக, 31 மாவட்டங்களிலும் தலா ஒரு ஷ்ரமிகா உறைவிடப் பள்ளி திறக்க, தொழிலாளர் நலத்துறை முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டடம் கட்டுவது உட்பட, உறைவிடப் பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க, தொழிலாளர் நலன் நிதியில் இருந்து 1,125.25 கோடி ரூபாய் செலவிடும்படி, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை தொழிலாளர் நலன் ஆணையம் நிர்வகிக்கும்.
ஷ்ரமிகா உறைவிடப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையில் கல்வி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளி கட்டடத்திலும், ஏழு வகுப்பறைகள், ஐந்து ஆய்வகங்கள், நுாலகங்கள், விளையாட்டு பொருட்கள் வைக்கும் அறை, அலுவலக அறை, ஊழியர்கள் அறை உட்பட, அனைத்து அறைகளும் கட்டப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

