/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செய்திகள் சில வரிகளில் பெங்களூரு
/
செய்திகள் சில வரிகளில் பெங்களூரு
ADDED : ஏப் 09, 2025 07:30 AM
மைசூரு, ஹூன்சூர் தாலுகாவில் உள்ள ஹைரிகே கிராமத்தில் நேற்று முன்தினம் புலி ஒன்று புகுந்தது. இந்த புலி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து வந்தது. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், வெடிகளை வெடித்து புலியை காட்டிற்குள் விரட்டினர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
சிந்தாமணி நகரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலிருந்த தேன் கூட்டிலிருந்து நேற்று காலை திடீரென வெளிவந்த தேனீக்கள், மாணவர்களை கொட்டின. இதில், 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிந்தியா என்ற மாணவியின் உடல்நிலை மட்டும் மோசமான நிலையில் உள்ளது.
பெங்களூரு மாகடி பகுதியில் உள்ள மாகடி குனிகல் சாலையில் நேற்று இரவு காரும், பைக்கும் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராத விதமாக காரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. பைக்கை ஓட்டி வந்த நவீன் குமார், 25, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பெங்களூரு நகரின் ஸ்ரீ தியாகராஜர் கூட்டுறவு வங்கி 2024 - 25ம் நிதியாண்டில் 11.56 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. இதில், நிகர லாபம் மட்டும் 6.37 கோடி ரூபாய். மேலும், சிறந்த நகர்ப்புற கூட்டுறவு வங்கி விருது ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டு உள்ளது என வங்கியின் சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

