/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சொத்து குவிப்பு வழக்கு ஈஸ்வரப்பாவுக்கு சிக்கல்
/
சொத்து குவிப்பு வழக்கு ஈஸ்வரப்பாவுக்கு சிக்கல்
ADDED : ஏப் 06, 2025 07:26 AM

பெங்களூரு : பா.ஜ.,வின் மூத்த தலைவராக இருந்தவர் ஈஸ்வரப்பா. இவர் பா.ஜ., அரசில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, வக்கீல் வினோத் என்பவர், 2016ல் ஷிவமொக்கா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் செய்தார். இந்த வழக்கு தள்ளுபடியானது.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வினோத் மேல்முறையீடு செய்தார். நீதிமன்றமும் 2020ல் மறு விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மனு தொடர்பாக, விசாரணை நடத்திய நீதிமன்றம், ஈஸ்வரப்பா மீதான சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கை விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி, லோக் ஆயுக்தா போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டது. இதனால் ஈஸ்வரப்பா நெருக்கடியில் சிக்கியுள்ளார்.

