/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்; அரசு இயந்திரம் பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு மாற்றம்
/
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்; அரசு இயந்திரம் பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு மாற்றம்
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்; அரசு இயந்திரம் பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு மாற்றம்
சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்; அரசு இயந்திரம் பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு மாற்றம்
ADDED : டிச 08, 2025 05:36 AM

பெலகாவி: கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், பெலகாவியில் இன்று துவங்குகிறது. அரசை கேள்விகளால் துளைக்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ள ன. அரசு இயந்திரம் பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு மாற்றம் செ ய்யப்பட்டு உள்ளது.
பெலகாவியில் உள்ள சுவர்ண விதான் சவுதாவில் ஆண்டுதோறும், டிசம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கிறது.
இந்த ஆண்டு கூட்டத்தொடர் இன்று துவங்கி 19ம் தேதி வரை நடக்கிறது.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பெலகாவிக்கு சென்று உள்ளதால், அரசின் மொத்த நிர்வாக இயந்திரமும், பெங்களூரில் இருந்து பெலகாவிக்கு மாறி உள்ளது. அரசின் மீது தினமும் எழும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து, அரசை கேள்விகளால் துளைத்து எடுக்க, எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. அவர்களுக்கு எப்படி பதிலடி கொ டுக்க வேண்டும் என்று, அமைச்சர்களுக்கு, முதல்வர், துணை முதல்வர் பாடம் எடுத்து உள்ளனர். எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் போராட்டம் நடத்த தயாராக இருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக போராட விவசாயிகள், பல அமைப்பினர் தயாராக உள்ளனர்.
கரும்பு தோரணம் கடந்த மாதம் கரும்புக்கு ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி, வடமாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பாகல்கோட்டில் 20 டிராக்டர்களுக்கு தீ வைக்கப்பட்டது. பின், கரும்புக்கு ஆதரவு விலையாக 3,400 ரூபாய் அரசு நிர்ணயித்தது. விவசாயிகள் மனதை குளிர்விக்கும் வகையில், விதான் சவுதா நுழைவு வாயிலில், கரும்பால் தோரணம் கட்டி உள்ளனர்.
டில்லியி ல் சமீபத்தில் கார் குண்டுவெடிப்பு நடந்ததால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இம்முறை பெலகாவியில் போலீஸ் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டு உள்ளது.
போலீசார், பத்திரிகையாளர் தங்குவதற்கு ஜெர்மன் கூடாரம் போடப்பட்டு உள்ளது. சட்டசபை செயலர் விசாலாட்சி நேற்று சட்டசபை அரங்கில் ஆய்வு செய்தார்.
அனல் உறுதி சபாநாயகர், உறுப்பினர்கள் இருக்கை மைக்குள் சரியாக வேலை செய்கிறதா என்று பார்வையிட்டார்.
ஒவ் வொரு ஆண்டும் பெலகாவியில் கூட்டத்தொடர் நடக்கும் போது, பத்து நாட்களும் வடமாவட்ட பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்களும், எம்.எல்.ஏ.,க்களும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் கடைசி மூன்று நாட்கள் மட்டுமே, வடமாவட்ட பிரச்னை குறித்து பேசப்படுகிறது.
இம்முறையாவது கூடுதல் நாட்கள் தங்கள் பகுதி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று, வடமாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் வலுவான கோரிக்கை வைத்து உள்ளனர். பெலகாவியில் கடும் குளிர் நிலவும் நிலையில், இன்று முதல் அடுத்த 10 நாட்களும் சட்டசபையில் அனல் பறக்க போவது உறுதி.

