/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேலையை விட மறுத்த மனைவியை கொன்ற 3வது கணவர் போலீசில் சரண்
/
வேலையை விட மறுத்த மனைவியை கொன்ற 3வது கணவர் போலீசில் சரண்
வேலையை விட மறுத்த மனைவியை கொன்ற 3வது கணவர் போலீசில் சரண்
வேலையை விட மறுத்த மனைவியை கொன்ற 3வது கணவர் போலீசில் சரண்
ADDED : டிச 28, 2025 05:02 AM
சம்பிகேஹள்ளி: வேலைக்கு செல்லக்கூடாது என, மூன்றாவது கணவர் கூறியதால் ஏற்பட்ட தகராறில், மனைவி குத்தி கொல்லப்பட்டார்.
பெங்களூரு சம்பிகேஹள்ளியின் அக்ரஹாரா லே - அவுட்டில் வசிப்பவர் சையத் ஜபி, 42. மெக்கானிக்கான இவர், தன் முதல் மனைவியை விட்டு பிரிந்து, ஆயிஷா சித்திகி, 34, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
ஆயிஷா சித்திகி ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவர். அதாவது, முதல் கணவர் இறந்ததால் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்தார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரையும் விவாகரத்து செய்தார். மூன்று மாதங்களுக்கு முன் மூன்றாவதாக சையத் ஜபியை மணந்தார்.
பியூட்டிஷியனான ஆயிஷா, மசாஜ் மற்றும் பியூட்டி பார்லரில் பணியாற்றினார். மனைவி பியூட்டிஷியன் வேலைக்கு செல்வது, கணவர் சையத் ஜபிக்கு பிடிக்கவில்லை. வேலையை விட்டு விடும்படி கட்டாயப்படுத்தினார். இதற்கு ஆயிஷா சம்மதிக்கவில்லை. அதனால், இருவருக்கும் இடையே தினமும் சண்டை நடந்தது.
நேற்று முன் தினமும் இரவு முழுதும் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த சையத் ஜபி, துணி வெட்டும் கத்திரியால் மனைவியின் கழுத்தில் சரமாரியாக குத்தி கொன்றார்.
அதன்பின் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். சம்பிகேஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

