/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நெற்கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்தலாம்
/
நெற்கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்தலாம்
PUBLISHED ON : பிப் 19, 2025

நெற்கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
நெல் சாகுபடியில், நெற்கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படும். இதை கட்டுப்படுத்த தவறினால், 40 சதவீதம் வரை சேதப்படுத்த வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, நெற்கதிர் வரும் போதும், நெல் மணிகளில் பால் பிடிக்கும் போதும், நெல் முதிர்வு ஏற்படும் போதும், நெற்கதிர் நாவாய் பூச்சி, சாறை ஊறிஞ்சு விடும். இந்த பூச்சி தாக்குதல் இருக்கும் நெல் வயலில், ஒரு விதமான துர்நாற்றம் வீசும்.
மேலும், நெல் மணிகள் கரும்புள்ளிகள் விழுந்து, எடை குறையும் வாய்ப்பு உள்ளது. இதை கண்காணிக்காமல் விட்டால், நெல் பதராக மாறவும் வாய்ப்பு உள்ளது.
இதை கட்டுப்படுத்த, 1 ஏக்கருக்கு ஒரு விளக்கு அமைத்து, கதிர்நாவாய் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். கே.கே.எம்., டஸ்ட் கலவை 1 ஏக்கருக்கு 2 கிலோ தெளிக்கலாம். மீத்தைல்டெமட்டான் 400 மில்லி, பிப்ரோனில் 400 மில்லி, இமிடாகுளோபிரிட் 12 கிலோ ஆகியவற்றில், ஏதேனும் ஒரு மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா, திரூர். 97910 15355

