/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பலூன் வடிவ கொய்யாவில் அதிக மகசூல்
/
பலூன் வடிவ கொய்யாவில் அதிக மகசூல்
PUBLISHED ON : செப் 10, 2025

பலுான் வடிவ கொய்யா சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த, செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழங்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்கிறேன்.
அந்த வரிசையில், பலுான் வடிவ கொய்யா சாகுபடி செய்துள்ளேன். குறிப்பாக, அழிந்து வரும் பாரம்பரிய கொய்யா ரகங்களில், இதுவும் ஒன்று.
இந்த கொய்யா பலுான் வடிவத்தில் இருப்பதால், பலுான் வடிவ கொய்யா என அழைக்கிறோம். இதை, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், எளிதாக சாகுபடி செய்ய முடிகிறது. அடிக்கடி கிளைகளை வெட்டி விட வேண்டும்.
சில நாட்டு கொய்யா ரகங்களில், விதைகள் அதிகமாக இருக்கும்; சதை பற்று குறைவாக இருக்கும். இந்த பலுான் வடிவ கொய்யாவில் சதை பற்று அதிகமாக இருக்கும்; விதைகள் குறைவாக இருக்கும்.
இதை, ஒட்டுச்செடியாக வாங்கி சாகுபடி செய்து, ஒட்டு கட்டி மீண்டும் சாகுபடிக்கு விரிவுபடுத்தலாம். இதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.