தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/விவசாய மலர்/சவுடு மண்ணிலும் விளையும் வெள்ளை நிற பரங்கிக்காய்

சவுடு மண்ணிலும் விளையும் வெள்ளை நிற பரங்கிக்காய்

சவுடு மண்ணிலும் விளையும் வெள்ளை நிற பரங்கிக்காய்


PUBLISHED ON : மார் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெள்ளை நிற பரங்கிக்காய் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.எல்.ஆர்., பண்ணை முதுகலை பட்டதாரி விவசாயி பி.மாதவி கூறியதாவது:

சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறி, பூ, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், வெள்ளை நிற பரங்கிக்காய் பாத்தி முறையில் சாகுபடி செய்துள்ளேன்.

ஒவ்வொரு கொடி யிலும், 3 அடிக்கு ஒன்று என, குறுகிய இடை வெளியில் காய்கள் மகசூல் கொடுக்கிறது.

இந்த பரங்கிக்காய் மஞ்சள் நிறத்தை காட்டி லும், வெள்ளை நிற பரங்கிக்காய் கூடுதல் சுவையுடன் இருப்பதால், மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

எங்களின் வீட்டு தேவைக்கு போக, சந்தையில் விற்பனை செய்து விடுகிறோம். அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு - பி.மாதவி, 97910 82317.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us