தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: வெள்ளரிக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து: வெள்ளரிக்காய்!

நம்மிடமே இருக்கு மருந்து: வெள்ளரிக்காய்!


PUBLISHED ON : மார் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடைக்கு இயற்கை கொடுத்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்று, வெள்ளரிக்காய்.

வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவில் இருக்கும் வெள்ளரிக்காயில், கொழுப்பு சத்து மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது. அதிகளவில் தண்ணீர் சத்து இருப்பதால், உடல் உஷ்ணத்தை நீக்கி, குளிர வைக்கிறது, வெள்ளரிக்காய்.

கோடை காலத்தில் ஏற்படும் தாகம், வறட்சி போன்றவற்றையும், வயிற்று உபாதைகளையும் போக்கும். வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவது தான் சிறந்தது. வெள்ளரிக்காயை அரைத்து உடலில் தேய்த்து குளித்தால், உடலின் நிறம் மாறும்.

கோடை காலத்தில் முகத்தில் தோன்றும் முகப்பரு மற்றும் சிறு வேனல் கட்டிகள் போன்றவற்றை வெள்ளரிக்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் சென்றதும், நீரால் கழுவினாலே போதும். அவை உதிர்ந்து விடும்.

தோல் சீவாமல், வெள்ளரிக்காயை வட்டமான வில்லைகள் செய்து, ஒரு வில்லையின் மேல் தக்காளி அதன் மேல் ஒரு வில்லை வெங்காயம் வைத்து, மிளகுத்துாளையும் கலந்து சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும். வெள்ளரிக்காயை பச்சையாக தோலோடு உண்பது தான் பலன் தரும்.

பிஞ்சு வெள்ளரிக்காயாக பார்த்து வாங்க வேண்டும். கோடை காலத்தில் வியர்வை வெளியேறி நாம் சோர்வாக இருக்கும் போது, ஒரு வெள்ளரி பிஞ்சை சாப்பிட்டாலே போதும், இழந்த சக்தியை மீட்டெடுக்கலாம்.

வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் சேர்த்து தயிர் பச்சடியாகவும் சாப்பிடலாம். கோடைக்கு மிகவும் குளுமை தரும்.

குறைந்த விலையில் கிடைத்தாலும், கோடைக்கு ஏற்றது, வெள்ளரிக்காய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us