தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து: சின்ன வெங்காயம்!

நம்மிடமே இருக்கு மருந்து: சின்ன வெங்காயம்!

நம்மிடமே இருக்கு மருந்து: சின்ன வெங்காயம்!


PUBLISHED ON : செப் 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 07, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சின்ன வெங்காயத்தை சமையலில் சேர்த்து, உணவின் சுவையை அதிகரிக்கலாம். அதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். இதில், வைட்டமின் 'சி, ஏ, கே, பி2, பாஸ்பரஸ், மெக்னீசியம், போலேட்' மற்றும் 'கால்ஷியம்' போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன; நார்ச்சத்தும் அதிகம் உள்ளது.

வெங்காயத்தை சாப்பிடுவதால், நரம்பு சம்பந்தமான நோய்கள் வராது. இதில் உள்ள வைட்டமின்கள், புற ஊதா கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. உடலில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.

வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால், உடல் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தின் நெடி, சில தலைவலிகளை குறைக்கும்.

சின்ன வெங்காயத்தில் சட்னி செய்து சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும், ரத்த குழாயின் உள்ளே உள்ள அடைப்புகளையும் நீக்கும் திறன் கொண்டது. வெங்காயத்தின் பயன் முழுமையாக கிடைக்க, அதை எண்ணெயில் அதிகம் வதக்க கூடாது.

அம்மை நோய் வராமல் தடுக்கவும், வந்தால் விரைவில் குணமாகவும், சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பின், இனப்பெருக்க மண்டலம் பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். இதை தடுக்க, அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து, மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால், பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

இந்திய மக்கள், குடல் புற்றுநோய் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு வெங்காயமும், மஞ்சளும் முக்கிய காரணம். ஆஸ்பிரின் மாத்திரையை விட வெங்காயம், ரத்தம் உறைதலை தடுப்பதில், பல மடங்கு சிறந்ததாக கூறுகின்றன, ஆய்வுகள். தினமும், மூன்று சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது, இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

சின்ன வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள், சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றன. உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு சின்ன வெங்காயம், சிறந்த தீர்வாகும். தலைமுடியில், புழு வெட்டு, கிருமித் தொற்று இருந்தால், சின்ன வெங்காயம் சாறு தடவலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னை, அதிகமான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை அகற்றுதல் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு, சின்ன வெங்காயம் ஒரு அருமருந்தாக இருக்கிறது.

சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று இருப்பவர்களுக்கும், குடலை சுத்தப்படுத்த வேண்டும் என்பவர்களுக்கும், ரத்தத்தில் இருக்கக் கூடிய நச்சுகள் நீங்குவதற்கும் சின்ன வெங்காயம் பயன் தரும்.

தைராய்டு பிரச்னைகள் தீர, சின்ன வெங்காயம் உதவுகிறது. சின்ன வெங்காயம் சாறு எடுத்து கொஞ்சமாக சுக்கு துாள், மஞ்சள்துாள் போட்டு, தைராய்டு வீக்கம் இருக்கும் இடத்தின் மீது பத்து போட்டு வந்தால் சரியாகும்.

அக்குள், தொடை இடுக்கு பகுதிகளில், தோல் அரிப்பு, பூஞ்சை தொற்று இருந்தால், சின்ன வெங்காயம் மற்றும் அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு மஞ்சள்துாள் கலந்து அந்த இடங்களில் பூச வேண்டும். நாளடைவில் சரியாகி விடும்.

- எழில் இனியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us