தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நம்மிடமே இருக்கு மருந்து - வில்வம்!

நம்மிடமே இருக்கு மருந்து - வில்வம்!

நம்மிடமே இருக்கு மருந்து - வில்வம்!


PUBLISHED ON : ஆக 25, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்வம் எல்லா இடங்களிலும் வளரக்கூடிய மரம். இது, ஆன்மிகத்திலும், மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இதன் இலைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்தது. அதிக அளவு பிராண வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது.

வில்வத்தில் ஏஜிலைன், மார்மின், மார்மிலோசில் போன்ற மருத்துவ வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என, அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வில்வ இலையில் துவர்ப்பு சத்து அதிகம். வில்வ இலையை வதக்கி, வீக்கங்களுக்கு கட்டினால், வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும், இதை கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுத்தால், கண் சிவப்பு, வலி, வீக்கம் குறையும். வில்வ இலையை அரைத்து, 10 மி.லி., அளவு எடுத்து, 50 மி.லி., தயிரில் கலந்து குடித்தால், வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

வயிற்றில் உண்டாகும் புண்கள் மற்றும் புற்றுநோயை வில்வ இலைச் சாறு குணப்படுத்துகிறது. வயிற்று சவ்வுகளில் உள்ள புண்களை ஆற்றும் அற்புத சக்தி வில்வத்திற்கு உண்டு.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால், சர்க்கரை நோய்க்கான மருந்துகளில் வில்வம் அதிகம் சேர்க்கப்படுகிறது.

வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள பித்தத்தை சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.

வில்வ காயின் தசைப் பகுதியை உலர்த்தி, பொடி செய்து வைத்து, ஒரு தேக்கரண்டி நீரில் கலந்து குடித்தால், வயிற்றுப்போக்கு குணமாகும்.

வில்வ பழத்தை பிசைந்து தலையில் தேய்த்து குளித்தால், உடல் குளிர்ச்சி அடைவதுடன், கண் எரிச்சலும் நீங்கும்.

வில்வ காயை வெயிலில் காய வைத்து, அதை எரித்து கரியாக்கி, பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களில் உண்டாகும் நோய்களை போக்கும்.

வில்வ மரத்தின் பட்டையை நீரில் கொதிக்க வைத்து, வடி கட்டி, காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு கொடுக்கலாம். இது, எல்லாவித காய்ச்சல்களையும் கட்டுக்குள் கொண்டு வரும்.

தொகுப்பு:ஏ.எஸ். கோவிந்தராஜன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us