PUBLISHED ON : மார் 15, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெருப்பும் கனவும்
ஒன்றுதான்
இரண்டும் அணையாமலிருக்கும் வரை
என்றும் அழகுதான்!
தலைமுடியும் நம்பிக்கையும்
ஒன்றுதான்
இரண்டும் உதிராமலிருக்கும் வரை
என்றும் அழகுதான்!
கண்ணாடியும் உறவும்
ஒன்றுதான்
இரண்டும் உடையாமலிருக்கும் வரை
என்றும் அழகு தான்!
மூச்சும் முயற்சியும்
ஒன்றுதான்
இரண்டும் நிற்காமலிருக்கும் வரை
என்றும் அழகுதான்!
வார்த்தையும் வாழ்க்கையும்
ஒன்றுதான்
இரண்டும் தவறாமலிருக்கும் வரை
என்றும் அழகுதான்!
உண்மையும் உடலும்
ஒன்றுதான்
இரண்டும் உறுதியாயிருக்கும் வரை
என்றும் அழகுதான்!
காதலும் நட்பும்
ஒன்றுதான்
இரண்டும் உண்மையாகயிருக்கும் வரை
என்றும் அழகுதான்!
இளமையும் உழைப்பும்
ஒன்றுதான்
இரண்டும் தளராமலிருக்கும் வரை
என்றும் அழகுதான்!
- கவிதாசன், கோவை.
தொடர்புக்கு : 98946 83013

