/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: எங்கேயும் தேட வேண்டாம்!

கவிதைச்சோலை: எங்கேயும் தேட வேண்டாம்!

கவிதைச்சோலை: எங்கேயும் தேட வேண்டாம்!

கவிதைச்சோலை: எங்கேயும் தேட வேண்டாம்!

கவிதைச்சோலை: எங்கேயும் தேட வேண்டாம்!

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

மன நிறைவில்

சந்தோஷம்!

எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

வளமான வார்த்தையில்

வாய்மை!

எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

பொறாமையற்ற மனதில்

அமைதி!

எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

பொய்மையை தவிர்த்த

உண்மை!

எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

உறுதியான வெற்றிக்கு

உழைப்பு!

எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

கருணை வடிவில்

மனிதாபிமானம்!

எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

குழந்தை வடிவில்

தெய்வம்!

எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

உழைப்புக்கான மூலதனம்

பொறுமை!

எங்கேயும் தேட வேண்டாம்

நம்மிடமே இருக்கிறது

வெற்றிக்கான காரணிகள்!

உண்மை, கருணை, பொறுமை, உழைப்புமுயற்சியில் கிடைக்கும் வெற்றி

நம் மனதின் எண்ணம் போல!

— ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி