தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - புதிய கதவுகள்!

கவிதைச்சோலை - புதிய கதவுகள்!

கவிதைச்சோலை - புதிய கதவுகள்!


PUBLISHED ON : ஜூலை 28, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீ

ஒரே பாதையில் நடந்து, உனக்கு

சலிப்பேற்பட்டால்

உடனே, உன் பாதையை மாற்றி விடு...

அப்போது தான் லட்சிய பயணம்

இனிமையாகும்!

நீ

ஒரே கதவை தட்டிக் கொண்டிருந்தால்

எந்தப் பலனுமில்லை...

வேறொரு கதவையும் தட்டு

அப்போது தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்!

உனக்கு

பழைய நண்பர்கள் துரோகம் இழைத்தால்

மலர் போல் வாடி விடாதே...

புதிய நண்பர்களை கவனமாக தேடு

நல்ல நண்பர்கள் கிடைத்தால்

இறுதி வரை அவர்களுடன் இணைந்திடு!

உன் காதலி, உன்னை விட்டு விலகினால்

தேவதாஸ் போல் தாடி வளர்த்து

சோக கீதம் பாடாதே...

உன்னை புரிந்து கொண்டவளை

மணமுடித்துக் கொள்!

உன் வேலையை விட்டு உன்னை துாக்கி எறிந்தால், கண்கள் கலங்காதே

தன்னம்பிக்கையுடன்

தேடுதல் வேட்டையை துவங்கு

பரந்த இந்த உலகில் நிச்சயம் உனக்கு

வேலை கிடைக்கும்!

இந்த வாழ்க்கை இல்லாவிட்டால்

இன்னொரு வாழ்க்கை உனக்கு இல்லை

ஆனால், ஒரு வாய்ப்பு இல்லாவிட்டால்

இன்னொரு வாய்ப்பு உனக்கு உண்டு!

வானத்தில் பறக்கும் பறவைகள்

ஒரு மரம் இல்லாவிட்டால்

இன்னொரு மரத்தை நாடுவது போல

உனக்கு ஒரு வாய்ப்பு தோல்வியானால்

இன்னொரு வாய்ப்புக் கதவுகள் திறந்திருக்கும்!

— எம்.பாலகிருஷ்ணன், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us