
என் வயது, 45; இல்லத்தரசியாக இருக்கிறேன். அன்று வீட்டில் வேலைகள் முடித்து ஓய்வாக இருந்தேன். அப்போது, என் மகள் படித்து வைத்திருந்த சிறுவர்மலர் இதழை எடுத்து புரட்டிப் பார்த்தேன். ஆச்சர்யமாக இருந்தது. அவ்வளவு அற்புதமான தகவல்கள் இருப்பதை கண்டேன். நேர்மையாக வாழ வழி சொல்லும் படக்கதை, நீதி போதிக்கும் சிறுகதை மற்றும் அற்புத செய்திகளை கண்டு வியந்தேன். தொடர்ந்து தவறாமல் வாசித்து வருகிறேன்.
பள்ளியில் படித்த நாட்கள், 'ஸ்கூல் கேம்பஸ்!' வாசிக்கும் போது நினைவில் பாய்ந்தோடுகிறது. சிறுவர், சிறுமியர் முகங்களில் மகிழ்ச்சி பொங்கும் 'குட்டி குட்டி மலர்கள்!' இனிக்க வைக்கிறது.
திறமையை வளர்க்க, 'உங்கள் பக்கம்!' சித்திரங்கள், கவலை மறக்க, 'மொக்க ஜோக்ஸ்!' தமாசு, அறிவை புதுப்பிக்க புதிர் விளையாட்டு என கவர்கிறது. என்னை அறியாமலே வாசிக்க வைக்கிறது. அறிவை வளர்க்கும் சிறுவர்மலர் இதழின் புகழ் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
- வி.கே.தீபா, கோவை