
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
சிகப்பு நிற புட்டரிசி - 1 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
தேங்காய் பால் - ஒன்றரை கப்
பால் - 2 கப்
நெய், வறுத்த முந்திரி --
தேவையான அளவு
ஏலக்காய் துாள் - சிறிதளவு.
செய்முறை:
சி வப்பு புட்டரிசியை வாணலியில் நன்கு சிவக்க வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அரைத்த புட்டரிசி, பால், தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கிளறவும். வாணலியில் ஒட்ட ஆரம்பிக்கும் போது, பாதி நெய் சேர்த்து கிளறவும். வெந்ததும், முந்திரி, ஏலக்காய் துாள், மீதமுள்ள நெய் சேர்த்து, அல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
பி--காம்ப்ளக்ஸ், இரும்பு சத்து, நார்சத்து அதிகமுள்ள, சிவப்பு புட்டரிசி அல்வா தயார். ருசியாக இருப்பதுடன், ஆரோக்கியமும் நிறைந்தது.
வி.நாகலட்சுமி, சென்னை.

