தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/முள்ளங்கி ரசம்!

முள்ளங்கி ரசம்!

முள்ளங்கி ரசம்!


PUBLISHED ON : ஏப் 12, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 50 கிராம்

தக்காளி - 2

பூண்டு பல் - 2

காய்ந்த மிளகாய் - 3

மஞ்சள் துாள், சீரகம், உப்பு, புளி, கறிவேப்பிலை, மல்லிதழை - சிறிதளவு

எண்ணெய், கடுகு, பெருங்காயம், வெந்தயம், துவரம் பருப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

முள்ளங்கியை பொடியாக நறுக்கி நன்றாக வதக்கவும். ஆறியதும் துண்டாக்கிய தக்காளி, வறுத்த துவரம் பருப்பு, பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள் துாள் சேர்த்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காயம், வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்த விழுதை போட்டு வதக்கவும். பின் புளி கரைசல் ஊற்றி, கறிவேப்பிலை, மல்லிதழை, உப்பு போட்டு கொதிக்க விடவும்.

சுவை மிக்க, 'முள்ளங்கி ரசம்!' தயார். சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். அனைத்து வயதினரும் விரும்புவர்.

- சி.அனுசுயா, தேனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us