/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
பழக்கத்தை மாற்ற தடை போடும் சூழல் காரணிகள்
/
பழக்கத்தை மாற்ற தடை போடும் சூழல் காரணிகள்
PUBLISHED ON : டிச 25, 2025 07:45 AM

நாம் தினமும் காணும் காட்சிகளும், கேட்கும் ஒலிகளும், நாம் எடுக்கும் முடிவுகளை சூட்சுமமாக வழிநடத்துகின்றன. பழக்கமான விளம்பரப் பாடல்கள் முதல், கண்ணில் படும் குறியீடுகள் வரை, பல சுற்றுப்புறத் துாண்டுதல்கள், மூளையை துாண்டும் சமிக்ஞைகளாக மாறுகின்றன .
இவை விளைவுகளை முன்கூட்டியே கணிக்கவும், மூளையின் சிந்திக்கும் ஆற்றலை மிச்சப்படுத்தவும் உதவுகின்றன. காலப்போக்கில், இந்தத் துாண்டுதல்கள், நம் மூளை முடிவெடுப்பதற்கு பயன்படுத்தும் குறுக்குவழிகளாக மாறுகின்றன.
ஆனால், சிலருக்கு இதுபோன்ற துாண்டுதல்கள், மாற்ற முடியாத பழக்கங்களாக இறுகிவிடுகின்றன. சூழல் மாறும்போது கூட, ஒரு காலத்தில் உதவியாக இருந்த இந்தத் துாண்டுதல்களையே பெரிதும் நம்பியிருப்பது அவர்கள் எடுக்கும் முடிவுகளை ஒருதலைப்பட்சமாக ஆக்குகிறது. இதனால் புதிய துாண்டுதல்கள் கிடைத்தாலும் கூட, அவர்கள் தவறான முடிவுகளையே மீண்டும் மீண்டும் எடுக்க நேரிடுகிறது.
இதுபோன்ற துாண்டுதல்களை மனிதர்கள் எந்த அளவிற்குச் சார்ந்திருக்கின்றனர் என்பதில், பெரும் வேறுபாடுகள் இருப்பதை, இத்தாலியிலுள்ள, போலோக்னா பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இத்தகைய துாண்டுதல்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், தங்கள் நம்பிக்கைகளை புதுப்பித்துக் கொள்வதில் சிரமப்படலாம். போதை பழக்கம், பதற்றம் மற்றும் கட்டாய மனப் பிறழ்வு போன்ற கோளாறுகளில், தென்படும் தவறான நடத்தைகள், மாறாமல் நீடிப்பது ஏன் என்பதை விளக்க இந்த ஆய்வு உதவுகிறது.

