/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : வறுமை ஒழிப்பு தினம்
/
தகவல் சுரங்கம் : வறுமை ஒழிப்பு தினம்
PUBLISHED ON : அக் 17, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
வறுமை ஒழிப்பு தினம்
உலகில் 2017 கணக்கின்படி தினசரி ரூ.180க்கு கீழ் சம்பாதிப்பவர்கள் வறுமை நிலையில் உள்ளவர்கள் என ஐ.நா., வரையறுத்துள்ளது. வறுமையால் பாதிக்கப் பட்டால் அவரது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நிபுணர் ஜோசப் ரெசின்கி. இவரது முயற்சியால் ஐ.நா., சார்பில் அக். 17ல் உலக வறுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ இத்தினம் வலியுறுத்துகிறது. உலகில் 2022ன் படி 67 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர், உடை, இருப்பிடம், கல்வி, வேலை இல்லாதவர்கள் வறுமையானவர்கள்.

