/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
எம்.எல்.ஏ.,வை புறக்கணிக்கும் ஆளுங்கட்சி புள்ளி!
/
எம்.எல்.ஏ.,வை புறக்கணிக்கும் ஆளுங்கட்சி புள்ளி!
PUBLISHED ON : டிச 19, 2024 12:00 AM

“பெட்டிக்கடைக்கு, தலா5,000 வீதம் பணம் வசூலிக்கிறாங்க பா...” என்றபடியே வந்தார், அன்வர்பாய்.
“யாருவே அது...” எனகேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
“தமிழகத்துல, போதைப்பொருட்களை முற்றிலும்ஒழிக்கணும்னு முதல்வர்உத்தரவு போட்டிருக்காரு... ஆனா, சென்னையில பல பகுதிகள்ல, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்கிற பெட்டிக் கடைக்காரங்களிடம், அந்தந்த ஏரியா போலீசார் மாதம், 5,000 ரூபாய் மாமூல் வசூலிக்கிறாங்க பா...
“குறிப்பா, துணை முதல்வர் உதயநிதி தொகுதியான சேப்பாக்கத்துலயே இந்த மாமூல்வசூல் ஜோரா நடக்குது...அதுலயும், போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கிற கடைகளை, எஸ்.ஐ., ஒருத்தர் தன் கட்டுப்பாட்டுல வச்சுக்கிட்டு, வசூல் பண்றாரு பா...” என்றார், அன்வர்பாய்.
“நிறைய மாமூல் கேட்டா,குட்கா விற்பனை, தானாகுறைஞ்சிடும்னு போலீசார் மாத்தி யோசிக்கறாளோ என்னவோ...” என சிரித்த குப்பண்ணாவே, “பள்ளிக்குள்ள புகுந்து ரகளை பண்ணியவரை சும்மா விட்டிருக்கா ஓய்...” என்றார்.
“மேல சொல்லுங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“துாத்துக்குடியைச் சேர்ந்த காங்., நிர்வாகி ஒருத்தர், அந்த கட்சியின்தொழிற்சங்கமான, ஐ.என்.டி.யூ.சி.,யில் மாநில பொறுப்புல இருக்கார்... இவரது மகன்,அங்க ஒரு தனியார் பள்ளியில படிக்கறார் ஓய்...
“அந்த பையனுக்கும்,சக மாணவர்களுக்கும்ஏதோ தகராறு... இதை கேள்விப்பட்ட காங்., நிர்வாகி, 'உற்சாக பானம்'ஏத்திண்டு சமீபத்துல பள்ளிக்கு போயிருக்கார்ஓய்...
“பள்ளி நிர்வாக அலுவலகத்துக்குள்ள அதிரடியா புகுந்து, அங்கிருந்தவாளை தரக்குறைவா திட்டியதும்இல்லாம, அங்க இருந்த பொருட்களையும் அடிச்சுநொறுக்கிட்டார்... பள்ளிதரப்புல, போலீஸ்ல புகார் குடுத்தா ஓய்...
“போலீசார் வந்ததும், தன் செயலுக்கு வருத்தம்தெரிவிச்ச காங்., நிர்வாகி,'உடைச்ச பொருட்களுக்குஇழப்பீடும் தந்துடறேன்'னுபம்மிட்டார்... போலீசாரும், 'போனா போறது போங்கோ... இனிமே இந்த மாதிரி செய்யப்டாது'ன்னு சொல்லி, அவரை வழியனுப்பி வச்சுட்டா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எம்.எல்.ஏ.,வை புறக்கணிக்கிறாருங்க...” என, கடைசி தகவலுக்குமாறிய அந்தோணிசாமியேதொடர்ந்தார்...
“பெஞ்சல் புயலால பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு, தி.மு.க., தலைமை அலுவலகமான, சென்னைஅறிவாலயத்துல இருந்துநிவாரண பொருட்களை அனுப்பி வச்சிருக்காங்க...
“அந்த மாவட்ட ஆளுங்கட்சியின் முக்கியநிர்வாகியோ, தனக்கு மட்டும் பொதுமக்களிடம்நல்ல பெயர் கிடைக்கணும்னு, அந்த பொருட்களை தன் ஆதரவாளரைவிட்டு வினியோகிக்க சொல்லிட்டாருங்க... விழுப்புரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வை கூப்பிடவே இல்லைங்க...
“மாவட்ட நிர்வாகியின்நிழல் மாதிரியே வலம் வர்ற விழுப்புரம் நகர துணை நிர்வாகி, நிவாரணபொருட்களை சப்ளை பண்ணிட்டாருங்க... இதனால, கடுப்பான எம்.எல்.ஏ., 'என்னையும், ஒன்றிய நிர்வாகிகளையும் புறக்கணிச்சுட்டு, மாவட்ட நிர்வாகி,தன் சொந்த செலவுல நிவாரண பொருட்களைவழங்கிய மாதிரி சீன் போட்டுட்டார்'னு கட்சிதலைமைக்கு புகார் அனுப்பியிருக்காருங்க...”என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் புதியவர்கள்அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

