/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கிறிஸ்துமஸ் விழா பால் தினகரன் வாழ்த்து
/
கிறிஸ்துமஸ் விழா பால் தினகரன் வாழ்த்து
PUBLISHED ON : டிச 24, 2025 05:30 AM

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, காருண்யா பல்கலை வேந்தரும், 'இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவருமான பால் தினகரன், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தி:
உலகில் சமாதானம் சீர்கெட்ட நிலையில் இருப்பதை கண்ட இறைவன், இவ்வுலகில் சமாதானப் பிரபுவாக, மனித அவதாரம் எடுத்து, இயேசு என்ற பெயரில் தோன்றினார். அவர் பிறக்கும்போது விண்ணகத் துாதர்கள் தோன்றி, 'பூமியிலே சமாதானம்' என்று முழுக்கமிட்டனர்.
இயேசு தோன்றியதன் வாயிலாக, மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் பாக்கியங்கள், எல்லா மக்களுக்கும் சென்றன. பாவ இருளில் இருந்த மக்கள் மனம் மாறி, இயேசுவின் அழைப்பால், இறைவனுடைய பிள்ளைகளாக மாறினர். நோயில் இருந்தவர்கள் குணமாக்கப்பட்டனர். மரண இருளில் இருந்தவர்களுக்கு பெரிய வெளிச்சம் உதித்தது.
இந்த பாக்கியங்களை தரவே, இயேசு இன்றும் கிறிஸ்துமஸ் நாளில் நமக்கு தோன்றுகிறார்.
இந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும்போது, அதே பாக்கியங்களை நீங்களும் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பால் தினகரன் தெரிவித்துள் ளார்.

