sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 20, 2025 ,புரட்டாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

அறை தர மறுத்த விடுதிக்கு ' சீல் ' வைத்த அதிகாரி!

/

அறை தர மறுத்த விடுதிக்கு ' சீல் ' வைத்த அதிகாரி!

அறை தர மறுத்த விடுதிக்கு ' சீல் ' வைத்த அதிகாரி!

அறை தர மறுத்த விடுதிக்கு ' சீல் ' வைத்த அதிகாரி!

1


PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''மா ஜி அமைச்சரின் புள்ளி விபரத்தை கேட்டதும், 'ரிலாக்ஸ்' ஆகிட்டாரு பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''திருச்சியில், நடிகர் விஜய்க்கு கூடிய கூட்டத்தை பார்த்து, முதல்வர் ஸ்டாலின், 'அப்செட்' ஆகியிருக்காரு... இது சம்பந்தமா, கரூர்ல முப்பெரும் விழாவை பிரமாண்டமா நடத்திக் காட்டிய, 'மாஜி' அமைச்சரிடம் பேசியிருக்காரு பா...

''அவரும், திருச்சியில் விஜய்க்கு, 5 லட்சம் பேர் வந்தாங்க என்றால், அவங்க குடும்பத்தினருக்கு தலா நாலு ஓட்டுகள்னு கணக்கு போட்டாலும், 20 லட்சம் ஓட்டுகள் விழும்... சீமானே, போன தேர்தல்ல, 35 லட்சம் ஓட்டுகள் வாங்கியும், ஒரு இடத்திலும் ஜெயிக்கலை... ஆனா, நம்ம கூட்டணி, 2.10 கோடி ஓட்டுகளை வாங்கி ஆட்சி அமைச்சிருக்கோம்...

''அதனால, விஜய் கூட்டம் எல்லாம் நமக்கு பாதிப்பே இல்லை... கண்டிப்பா, 200 தொகுதிகள்ல ஜெயிச்சு மீண்டும் ஆட்சிக்கு வருவோம்னு சொல்லியிருக்காரு... அதை கேட்டு முதல்வரும், 'ரிலாக்ஸ்' ஆகிட்டாராம் பா...'' என்றார், அன்வர்பாய்.

''அறிவிச்ச வேகத்துல வாபஸ் வாங்கிட்டாவ வே...'' என்ற, பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிர்ணயிச்சதுல, 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்த புகார்ல, ஐந்து மண்டல தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செஞ்சாங்கல்லா...

''இந்த ஐந்து மண்டல தலைவர் பதவி உட்பட சில மாவட்டங்களின் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியா இருக்கும் பதவிகளுக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையம் சமீபத்துல வெளியிட்டுச்சு வே...

''ஆனா, மறுநாளே மதுரை மண்டல தலைவர் தேர்தல் அறிவிப்பை மட்டும் வாபஸ் வாங்கிட்டு... அதாவது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தந்த மாவட்டங்கள்ல இருக்கிற உள்ளாட்சி காலியிடங்கள் விபரங்களை மாநில தேர்தல் ஆணையம் கேட்கும்...

''அந்த வகையில, மதுரை மாவட்ட நிர்வாகமும், 'ஐந்து மண்டல தலைவர் பதவி காலியா இருக்கு'ன்னு தகவல் அனுப்பிட்டு... மாநில தேர்தல் ஆணையமும் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுச்சு வே...

''அப்புறமா தான், 'முதல்வர் உத்தரவுப் படியே ஐந்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செஞ்சாவ... அதனால, முதல்வர் ஒப்புதல் இல்லாம அங்க தேர்தல் நடத்தக் கூடாது'ன்னு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தெரிஞ்சிருக்கு...

''உடனே பதறியடிச்சு, மதுரை தேர்தல் அறிவிப்பை மட்டும் வாபஸ் வாங்கிட்டாவவே...'' என்றார், அண்ணாச்சி.

''ரூம் கேட்டு மறுத்துட்டதால, 'சீல்' வச்சுட்டார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் இருக்கும் ஒரு விடுதியில், நகராட்சியின் முக்கிய அதிகாரி ஒருத்தர், ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலருடன் போய் அறை கேட்டிருக்கார்... சுற்றுலா பயணியர் தங்கியிருந்ததால, 'அறை காலியில்லை'ன்னு விடுதி ஊழியர்கள் சொல்லியிருக்கா ஓய்...

''இதனால கடுப்பான அதிகாரி, 'மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு'ன்னு சொல்லி, விடுதி மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி, 'சீல்' வச்சுட்டார்... அதுவும் இல்லாம, நகராட்சிக்கு உட்பட்ட விடுதிகளின் உரிமையாளர்கள் எல்லாரும், தன்னை தனியா வந்து பார்க்கணும்னும் உத்தரவு போட்டிருக்கார்... 'கட்டிங் வசூலிக்கவே இப்படி பண்றார்'னு விடுதி உரிமையாளர்கள் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''சக்திவேல் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us