/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
எம்.எல்.ஏ. , ' சீட் ' டுக்கு ' துண்டு ' போடும் எம்.பி. , யின் உறவினர்!
/
எம்.எல்.ஏ. , ' சீட் ' டுக்கு ' துண்டு ' போடும் எம்.பி. , யின் உறவினர்!
எம்.எல்.ஏ. , ' சீட் ' டுக்கு ' துண்டு ' போடும் எம்.பி. , யின் உறவினர்!
எம்.எல்.ஏ. , ' சீட் ' டுக்கு ' துண்டு ' போடும் எம்.பி. , யின் உறவினர்!
PUBLISHED ON : செப் 12, 2025 12:00 AM

''சொ ந்த கட்சி தலைவர் களே கலந்துக்கல பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''எந்த கட்சி விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஓட்டு திருட்டு விவகாரம் தொடர்பா, மத்திய பா.ஜ., அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டிச்சு, தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி தலைமையில், சமீபத்தில் கோவையில கண்டன பேரணி நடத்தினாங்க...
''பேரணிக்கு அனுமதி மறுத்த போலீசார், கண்டன கூட்டத்துக்கு மட்டும் அனுமதி தந்தாங்க பா...
''இதுல கலந்துக்கிறதா, தி.மு.க., மாணவர் அணி மாநில செயலர் ராஜிவ்காந்தி வாக்கு குடுத்திருந்தாரு... ஆனா, மாநில காங்., தலைமையின் அனுமதி பெறாம சின்னதம்பி பேரணி நடத்துறதை கேள்விப்பட்டு, கடைசி நேரத்துல புறக்கணிச்சிட்டாரு பா...
''அதேபோல, காங்கிரசின் கோவை மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர்களும் புறக்கணிச்சுட்டாங்க... தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் மட்டும் கலந்துக்கிட்டு, மாணவர் காங்கிரசார் மானத்தை காப்பாத்தி யிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''சார் - பதிவாளர் ஆபீஸ் பத்தி வண்டி வண்டியா புகார் சொல்றா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சார் -- பதிவாளர் ஆபீஸ்ல, சுத்தியிருக்கற, 33 வருவாய் கிராமங்களின் பத்திரப்பதிவுகள் நடக்கு... இங்க பத்திரப்பதிவுக்கு தினமும், 200 டோக்கன்கள் குடுத்துண்டு இருந்தா ஓய்...
''ஆனா, புதுசா வந்த பெண் அதிகாரி தினமும், 100க்கும் குறைவான டோக்கன்களே தராங்க... அவசர பதிவுக்காக, 5,000 ரூபாய் கட்டி வாங்கற டோக்கன்களை கூட முறையா தர்றதில்ல ஓய்...
''குடும்ப செட்டில் மென்ட், பாகப் பிரிவினை பத்திரங்கள்ல சின்ன சின்ன குறைகளை சுட்டிக்காட்டி, பத்திரப்பதிவு பண்ணாம பெண் அதிகாரி அலைக்கழிக்கறாங்க...
''அதே நேரம் இந்த பத்திரங்களுக்கு, 50,000 ரூபாய் வரை, 'கட்டிங்' வெட்டிட்டா, உடனே பதிவு பண்ணி குடுத்துடுறாங்க... இது சம்பந்தமா மாவட்ட பதிவாளரிடம் பலர் புகார் குடுத்தும் பலன் இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரியசாமி அண்ணாச்சி, ''ஹலோ... வாணின்னு யாரும் இல்ல... ராங் நம்பர்...'' என கூறி, வைத்தபடியே, ''எம்.எல்.ஏ., சீட்டுக்கு இப்பவே துண்டு போட்டுட்டாரு வே...'' என்றார்.
''எந்த கட்சியிலங்க... '' என கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், கூடலுார் சட்டசபை தொகுதி, தி.மு.க.,வின் கோட்டையா இருந்துச்சு... ஆனா, 2021 சட்டசபை தேர்தல்ல, அ.தி.மு.க.,வை சேர்ந்த பொன் ஜெயசீலன் இங்க நின்னு ஜெயிச்சிட்டாரு வே...
''வர்ற சட்டசபை தேர்தல்லயும், இவரே போட்டியிட தயாராகிட்டு இருக்காரு... அதே நேரம், தங்களது கையை விட்டு போன கூடலுாரை கைப்பற்ற ஆளுங்கட்சியான தி.மு.க., இப்பவே களம் இறங்கிட்டு வே...
''கூடலுாரில் போட்டியிட, முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி உள்ளிட்ட பலரும் முயற்சி பண்ணுதாவ... அதே நேரம், நீலகிரி எம்.பி.,யா இருக்கிற தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜாவின் உறவினரான பரமேஸ்குமாரும் இங்க களம் இறங்க முடிவு பண்ணியிருக்காரு வே...
''இவரே இந்த தொகுதி பொறுப்பாளரா இருக்கிறதாலும், தலைமையிடம் நெருக்கமா இருக்கும் ராஜாவோட தயவிலும் சீட் வாங்கிடுவார் என்பதால, உள்ளூர் நிர்வாகிகள், 'அப்செட்'ல இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.