உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீபெரும்புதுார்,ஸ்ரீபெரும்புதுார் காவல் உட்கோட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய மூன்று போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மூன்று போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், ஏழு ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 70 பேருடன், போலீசாரின் கலந்தாய்வு கூட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில், காணாமல் போய் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தவர்கள், உயிரிழந்தவர்கள் ஆகியவர்களின் மீதும், நிலுவையில் உள்ள வழக்குகள் நிறைவு செய்வதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டன
மேலும், இதுவரை திரும்பி வராதவர்கள் குறித்த, கூடுதல் தகவல் பெறப்பட்டு, அவர்களை் விரைந்து கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.
