/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இருளில் மூழ்கிய ஒரகடம் சிப்காட் சாலை
/
இருளில் மூழ்கிய ஒரகடம் சிப்காட் சாலை
PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 200க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணிப்புரியும் வடமாநில தொழிலாளர்களுக்கும், தொழிற்சாலை வாகனங்களும், சிப்காட் சாலையே பிரதான வழித்தடமாக உள்ளது.
இந்த நிலையில், இரவு நேரங்களில் சிப்காட் சாலையில் உள்ள பெரும்பாலான மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள் இரவில் விபத்து அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
தவிர, இரவு நேரங்களில் பணி முடிந்து நடந்து செல்லும் வட மாநில ஊழியர்கள் வழிப்பறி, மொபைல்போன் பறிப்பு அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகரிகள், மின் விளக்குகளை சரியாக பராமரித்து, இரவு நேரங்களில் தொழிலாளர்களும், வாகனங்கன ஓட்டிகளும் அச்சமின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

