ADDED : ஏப் 28, 2026 04:12 AM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம் மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய தெருக்களில், 38 இடங்களில் கடந்த ஆண்டு 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், ஹாஸ்பிட்டல் சாலை - வைகுண்டபுரம் விரிவாக்கம் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்களில் ஒரு கேமரா தலைசாய்ந்த நிலையில் உள்ளது.
இதனால், இப்பகுதியில் ஏதேனும் குற்ற சம்பவம் நடந்தாலும், குற்ற செயலில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
இதனால், இப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.
எனவே, ஹாஸ்பிட்டல் சாலையில், தலை சாய்ந்த நிலையில் உள்ள 'சிசிடிவி' கேமராவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.மாரிமுத்து, காஞ்சிபுரம்.
