தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /திண்டுக்கல்/ மரங்களை பாழாக்கும் விளம்பர பலகைகள்

 மரங்களை பாழாக்கும் விளம்பர பலகைகள்

 மரங்களை பாழாக்கும் விளம்பர பலகைகள்


ADDED : மார் 13, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேடிக்கை பார்க்கும் மின் துறை

திண்டுக்கல்- பழநி ரோட்டில் மின்கம்பத்தில் ஆபத்து என்று தெரிந்தும் மின்கம்பம் முழுவதும் விளம்பர பலகை அமைத்துள்ளனர் .இதை தடுக்க வேண்டிய மின் துறையினர் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர்.

செல்வி, திண்டுக்கல்.

மரங்களை பாழாக்கும் அபாயம்

திண்டுக்கல் -பழநி ரோட்டில் மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர் .மரத்தில் ஆங்காங்கே ஆணிகளால் அடிப்பதால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளது .ஆணி அடித்து விளம்பரம் செய்வதை தடுக்க வேண்டும்.

கார்த்திக், திண்டுக்கல்.

தேவை நடவடிக்கை

திண்டுக்கல் பாரதிபுரம் ரேஷன் கடை அருகே நடுரோட்டில் உள்ள மின்கம்பத்தால் விபத்துக்கள் நடக்கிறது .பெரிய வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன .மின்கம்பத்தை ஓரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூர்த்தி, திண்டுக்கல்.

துார் வாராத கால்வாய்

பழநி ராஜாஜி தெரு 12வது வார்டில் உள்ள சாக்கடை ஒரு மாதங்களாக துார் வராமல் உள்ளதால் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .மேலும் நோய் பரவும்அபாயம் உள்ளதால் கால்வாயை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணபதி பழநி.

மின் கம்பத்தில் படரும் செடிகள்

தென்னம்பட்டி குரும்பபட்டியில் மின் கம்பத்தில் படர்ந்து இருக்கும் செடிகள் மூலம் தேவாங்குகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் மின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. மின்கம்பத்தில் படரும் செடிகளை அகற்ற வேண்டும்.

--ராமசாமி, எரியோடு.

கோழிக்கழிவுகளால் சுகாதாரக் கேடு

பழநி ரயில்வே ஸ்டேஷன் அருகே டி.எஸ்.பி., கேம்ப் போகும் வழியில் கோழிக் கழிவுகளை கொட்டுகின்றனர் .இதனால் தெரு நாய்கள் சண்டை போடுகிறது . சுகாதாரக் கேடு ஏற்படும் நிலையில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.

விக்னேஷ் பழநி.

வீணாகும் குடிநீர்

பழநி அருகே நெய்க்காரப்பட்டி குருவப்பா பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகச் செல்கிறது .கோடை காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகமத் ஜின்னா மானுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us