sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

கோயம்புத்தூர்

/

 மோசமான ரோடு - வாகன ஓட்டிகள் படாதபாடு

/

 மோசமான ரோடு - வாகன ஓட்டிகள் படாதபாடு

 மோசமான ரோடு - வாகன ஓட்டிகள் படாதபாடு

 மோசமான ரோடு - வாகன ஓட்டிகள் படாதபாடு


UPDATED : மார் 16, 2026 06:54 AM

ADDED : மார் 16, 2026 06:52 AM

Google News

UPDATED : மார் 16, 2026 06:54 AM ADDED : மார் 16, 2026 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

எட்டிமடை பிரிவு அடுத்து நயரா பெட்ரோல் பங்க் அருகே சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய பள்ளங்கள் உள்ளன. கார், டெம்போ வாகனங்கள் தடுமாறிச் செல்கையில், பைக்கில் செல்வோர் விழுந்து காயம்படுகின்றனர். 20க்கும் மேற்பட்ட முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையுமில்லை.

- கார்த்திக்: எட்டிமடை

மலையாய் குவியும் குப்பை

சுண்டக்காமுத்துார் ரோடு, பி அண்ட் டி காலனி, ராமசெட்டிபாளையம், கூட்டுறவு நகர் அருகே, சாலையோரம் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. நாளுக்கு நாள் குப்பை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், சுற்றியுள்ள பகு தியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கியுள்ள குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.

- சங்கர்: சுண்டக்காமுத்துார்

பேருந்து நிறுத்தம் வேண்டும்

பொள்ளாச்சி, பாலக்காட்டிலிருந்து பழநி வரும் பேருந்துகள் காரமடை பிரிவிலும் அடுத்து சாமி தியேட்டரிலும் இறக்கி விடப்படுகின்றனர். இடைப்பட்ட பாலாஜி மில் பகுதிக்கு மிகவும் அதிக இடைவெளி உள்ளதால், அங்கு பேருந்து நிறுத்தத்தை அமைக்க வேண்டும். கடந்த ஒரு வருடமாக இதுகுறித்து மனு கொடுத்தும் நடவடிக்கையில்லை.

- அருண்: காரமடை

தினமும் விபத்து

கணபதி போலீஸ் குவாட்ரஸ் சாலையில், சிட்டி பேக்கரி முதல் அன்னபூர்ணா ஹோட்டல் செல்லும் எப்.சி.ஐ., ரோடு, நயரா பெட்ரோல் பங்க் வரை ரோடு மோசமாக உள்ளது. தார் பெயர்ந்து வெறும் மண்ணாக உள்ளது. தினமும் விபத்துகள் நடப்பதால் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.

- கார்த்திக்: கணபதி

குழாய் உடைப்பு

தண்ணீர்பந்தல், ஹரி ஸ்ரீ கார்டன், ராஜ வீதியில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. ஒவ்வொரு முறை தண்ணீர் விநியோகத்தின் போதும் தினமும் அதிகளவு தண்ணீர் சாலையில் வீணாகி வருகிறது. விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- தெய்வாணை: தண்ணீர்பந்தல்

வீணாகும் குடிநீர்

அஜ்ஜனுார் அருகில் கீர்த்தி நகர் அருகே ராஜா வீதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. வெயில் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால் விரைந்து குழாய் பழுதை சரிசெய்ய வேண்டும்.

- அசோக்: அஜ்ஜனுார்

தெருவிளக்கு பழுது

மேற்கு மண்டலம், 39வது வார்டில், 'எஸ்.பி -33 பி- 10' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. இரவு நேரங்களில் வெளியே செல்ல பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால் பழுதான விளக்கை உடனே மாற்ற வேண்டும்.

- மாலதி: மேற்கு மண்டலம்






      Dinamalar
      Follow us