sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

சொல்கிறார்கள்

/

சிறு தொகையாக இருந்தாலும் நாம் சம்பாதிக்க முயற்சிக்கணும்!

/

சிறு தொகையாக இருந்தாலும் நாம் சம்பாதிக்க முயற்சிக்கணும்!

சிறு தொகையாக இருந்தாலும் நாம் சம்பாதிக்க முயற்சிக்கணும்!

சிறு தொகையாக இருந்தாலும் நாம் சம்பாதிக்க முயற்சிக்கணும்!

1


PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 19, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொத்தம் 6,000 கொலு பொம்மைகள் வைத்துள்ள, சென்னையைச் சேர்ந்த நந்தினி வெங்கடேஷ்: எங்கள் வீட்டில், 6,000க்கும் மேல் கொலு பொம்மைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் வைத்து நவராத்திரி கொண்டாடுவோம்.

அப்போது மட்டும், வீட்டில் இருக்கிற எல்லாரும் ஒரே ரூம்ல தங்குவோம். இதுவரை 13 ஆண்டுகளாக அப்படித்தான் செய்து வருகிறோம்.

எங்கள் வீட்டில் 3,500 விநாயகர் சிலைகள் இருக்கின்றன. ஒண்ணு மாதிரி இன்னொன்று இல்லாமல் விதவிதமாக கலெக்ட் செய்து வைத்திருக்கிறோம். விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு, எங்கள் வீடு முழுக்க விநாயகர் சிலைகளை வைப்போம்; அது தான் எங்கள் வீட்டோட ஸ்பெஷல்.

சிங்கப்பூரில், 10 ஆண்டுகள் வேலை பார்த்தேன். அதன்பின் இந்தியாவுக்கு வர காரணமாக இருந்தது, என் குழந்தைகளோட படிப்பு தான். நம் ஊர் பாடம் சம்பந்தமாக அவங்க படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதேசமயம் குடும்ப சூழல் காரணமாகவும் இங்கு வர வேண்டி இருந்தது. இங்கு வந்தபின், வெளியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற யோசனை எனக்கு வரவில்லை.

'நம்ம பாட்டி எப்படி எல்லாம் இருந்தாங்க, அவங்களுக்கு என்ன பிடித்திருந்தது, இந்த பொம்மைகளை எப்படி சேகரித்தாங்க' என்பதை நம்ம சந்ததியினருக்கு நாம நேரடியாக சொல்லலைன்னா கூட, ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்பதால் தான், 'யு டியூப் சேனல்' ஆரம்பித்தேன்.

சில பெண்கள், சமூக வலைதளங்களை தங்களோட பிசினஸ் தளமாக பயன்படுத்துறாங்க. இது, ரொம்பவே ஆரோக்கியமான விஷயம் தான். அதனால், பெண்களுக்கான உலகமாக, அவங்க முன்னேறுவதற்கான மீடியமா இந்த சோஷியல் மீடியாவை நான் பார்க்குறேன்.

பெண்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில், உங்களுக்குள் நிச்சயமாக ஏதாவது ஒரு திறமை இருக்கும். அது என்னவென்று முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.

'வீட்டில் சப்போர்ட் இல்லை. எங்களால் வெளியில் வரமுடியாது' என, எப்போதும் அடுத்தவங்களை காரணம் சொல்லியபடியே இருக்காதீங்க. வீட்டில் இருந்தபடியே சின்னதா பிசினஸ் ஆரம்பித்தவர்கள் எல்லாம், இன்று நிறைய மாற்றங்கள் செய்து முன்னேறி இருக்காங்க.

பொருளாதார சுதந்திரம் குறித்து பலர் பேசுகின்றனர். அதனால், நம் கையில் பணம் இருக்க வேண்டும். நமக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்றால் கூட கணவரை எதிர்பார்க்க கூடாது.

யாருக்காவது உதவ வேண்டும் என்றாலும், மற்றவர்கள் தயவை எதிர்பார்க்காமல், நம் கையில் இருக்கிற பணத்தில் உதவலாம். சிறு தொகையாக இருந்தாலும் அதை நாம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us