/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஆய்வகத்தில் வைரங்களை உருவாக்குகிறோம்!
/
ஆய்வகத்தில் வைரங்களை உருவாக்குகிறோம்!
PUBLISHED ON : டிச 22, 2025 03:00 AM

ஆய்வக வைரங்கள் குறித்து கூறும், 'வொண்டர் டைமண்ட்ஸ்' நிறுவனர்களில் ஒருவரான ஐஸ்வர்யா குப்தா: சுத்தமான கரிமம், பூமிக்கு அடியில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் பல கோடி ஆண்டுகளாக இருப்பதால், வைரமாக மாறுகிறது.
அதே போல, 100 சதவீதம் சுத்தமான கரிமத்தை ஒரு கருவியில் வைத்து, பூமிக்கு அடியில் இருக்கும் அதே அழுத்தம், வெப்ப நிலையை செலுத்தி, செயற்கை வைரம் உரு வாகும் சூழல், ஆய்வகத்தில் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அளவை பொறுத்து, ஆய்வக வைரங்கள் உருவாக சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம்.இயற்கை வைரங்களில் உருவாக்கப்படும் நகைகளை போலவே, ஆய்வக வைரங்களில் செய்யப்படும் நகைகளுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
வைரங்களில் இருக்கும் வெட்டுகள், நிறம், தெளிவு, காரட் ஆகியவற்றிலிருந்து
அதன் தரத்தை அறியலாம். இயற்கை வைரங்களின் தரத்துக்கு சான்றளிக்கும், தரத்தை நிர்ணயிக்கும்,சர்வதேச ஆய்வுக்கூடங்கள் தான், ஆய்வக வைரங்களின்தரத்தையும் பரிசோதித்து சான்றிதழ் வழங்குகின்றன.
நகைகள் வாங்கும்போது, அந்த சான்றிதழ்கள் எல்லாம்உள்ளனவா என்று சரிபார்த்து வாங்க வேண்டும். பொதுவாக,9, 14, 18 காரட் தங்கத்துடன், ஆய்வக வைரங்கள் சேர்த்து நகைகள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.ஆய்வக வைரத்தின் விலை, இயற்கை வைரத்தின் விலையில்,மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும்.
விலை குறைவாக இருந்தாலும், இயற்கை வைரங்களோடு ஒப்பிடும்போது, தோற்றத்தில் எந்த வேறுபாடும் இருக்காது. எனவே, தங்க நகை வாங்கும் விலையில், ஆய்வக வைரங்களை வாங்கி விடலாம்.
கண்ணாடி மேல் விரல் வைத்தால் ரேகை படிவது போலவே, வைரக்கற்கள் மீதும் ரேகை தடயங்கள் பதியும். எனவே, வைரத்தில் கை படாமல், நகைகளை அதன்பக்கவாட்டில் பிடித்து கையாள்வது நல்லது.
வைர நகையை கழற்றிய பின்,மெல்லிய காகிதமான, 'டிஷ்யூ பேப்பரில்' சுற்றி, காற்று புகாத உறைகளில் போட்டு வைக்கலாம்.வைர நகைகளை தினமும் அணிபவராக
இருந்தால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, வாங்கிய கடையில் கொடுத்து சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
ஆய்வக வைரங்களை பொறுத்தவரையில், எங்களுடைய நிறுவனத்தின், 25 கிளை களிலும் வாங்கலாம்; மாற்றியும் கொள்ளலாம். தேவையெனில்,அந்த நகைகளை
எங்கள் கிளைகளிலேயே விற்பனையும் செய்து கொள்ளலாம்.ஆய்வக வைரங்களுக்கும் குறிப்பிட்ட மறுவிற்பனை மதிப்பு உள்ளது. எங்கள் நிறுவனத்தில், ஆண்டுக்கு 100 கோடி
ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது!
தொடர்புக்கு 63747 12556

