/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கைரேகை பதிவு செய்தால் மட்டுமே நுழைய முடியும்!
/
கைரேகை பதிவு செய்தால் மட்டுமே நுழைய முடியும்!
PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

முழு வீட்டையும் வாடகைக்கு எடுத்து தங்காமல், 'கோ லிவ்விங்' எனப்படும் பலர் இணைந்து தங்கும் குடியிருப்புகளை நிறுவியுள்ள, 'ட்ரூலிவ் பிராப்பர்ட்டீஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோஹித் ரெட்டி:பேச்சுலர்கள் தங்கும் வீடுகள், விடுதிகள் போன்றவை பல ஆண்டுகளாக அனைத்து இடங்களிலும் இருந்து வருகின்றன. அதை ஒழுங்கமைக்கப்பட்ட துறையாக மாற்றியுள்ளது தான், கோ
லிவ்விங்.
பணிக்கு செல்லும் பேச்சுலர்கள், தனித்து வாழும் பெண்கள், கோ லிவ்விங் அபார்ட்மென்ட்களில் அதிகம் தங்குகின்றனர். வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்காக வருவோர் தான், அதிகம் தங்கு
கின்றனர். இதில், ஸ்டூடியோ வகை அறைகள் உள்ளன.
அந்த அறையிலேயே படுக்கை, மெத்தை, 'டிவி' மைக்ரோவேவ், பிரிஜ், வாஷிங் மிஷின், வாட்டர் பியூரிபையர், 'ஏசி' என, அனைத்து வசதிகளும் இருக்கும். தனிநபர் அல்லது இருவர் தங்குவது போன்று அறைகள் இருக்கும். தவிர சிறிய தியேட்டர், ஜிம், கேமிங், டைனிங் அறை போன்ற
வசதிகள் பொதுவாக இருக்கும். ஒரு மாத முன்பணம் கட்டினால் போதும்.குடும்பத்தினர், நண்பர்கள் தங்குவதற்கு என்று விருந்தினர் அறைகளும் உள்ளன. ஒரு நாளைக்கு என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்.
தவிர, அலுவலக செட்டப்பும் வைத்திருக்கிறோம். அங்கு பணியாற்றுவோருக்கு தடை இல்லாத இணையம், மின்சாரம் வழங்கப்படும். இங்கு, உணவகம் ஒன்றும் செயல்படுத்தப்படுகிறது.இங்கு தங்குவோரில், 45 சதவீதத்தினர் பெண்கள். இங்கு வசிப்போர், தங்கள் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்; வெளிநபர்
உள்ளே நுழைய முடியாது. பெண்களின் உதவிக்காக, 24 மணி நேரமும் பெண் ஊழியர் ஒருவர் இருப்பார். பாதுகாப்பிற்காக, 24 மணி நேரமும் செக்யூரிட்டிகள்
இருக்கின்றனர்.
இந்த ஸ்டூடியோ அபார்ட்மென்ட்களை சொந்தமாகவும் வாங்க முடியும். அதில் தங்குவோருக்கான சேவையை நாங்கள் அளிப்போம். அபார்ட்மென்ட்டை வாங்கும்போதே, அவர்களுக்கான வாடகை வருமானத்தையும் உறுதிசெய்கிறோம்.
ஆரம்பத்தில், ஒன்பது ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்வோம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகை வருமானம் அதிகரிக்கப்படும்.சென்னையில், 25 கோ லிவ்விங் அபார்ட்மென்ட்கள் உள்ளன. அடுத்தக்கட்டமாக பெங்களூரு, புனே, ஹைதராபாத் நகரங்களில் இதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம்.
தமிழகத்தில் கோவை, திருச்சியிலும், இதுபோன்ற அபார்ட்மென்ட்களை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

