/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நமக்கு பிடிச்சதை பண்ணும்போது கஷ்டமே தெரியாது!
/
நமக்கு பிடிச்சதை பண்ணும்போது கஷ்டமே தெரியாது!
PUBLISHED ON : ஏப் 09, 2024 12:00 AM

நடுத்தர வயதினர் அதிகம் விரும்பும், 'லைப் ஸ்டைல்' வீடியோக்கள் வாயிலாக, சோஷியல் மீடியாவில் பிரபலமடைந்துள்ள, ஓசூர் அடுத்த கெலமங்கலத்தைச் சேர்ந்த, 23 வயது பவானி:
பி.இ., முடித்து விட்டு ஐ.டி., துறையில் பணியாற்றினேன். 2021- டிசம்பரில், குடும்பத்தினருடன், 'பவானி விலாக்ஸ்' என்ற யு டியூப் சேனலை துவங்கினேன். சேனல் ஆரம்பிச்சு ஒன்றரை ஆண்டு வரை வருமானமே வரல.
அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களும், 'இதுலெல்லாம் 1 ரூபாய் கூட வருமானம் வராது. வேற நல்ல வேலைக்கு போய் உருப்படுற வழியை பாரு'ன்னு சொன்னாங்க.
அம்மா தான், 'காசு வருது, வரல. முயற்சி பண்ணிட்டே இரு'ன்னு சொல்வாங்க. அந்த நேரத்துல, 'ஷார்ட்ஸ் வீடியோஸ்' 10 மில்லியன் வியூஸ் போனா, மானிட்டைஸ் ஆகும்னு யு டியூப்ல புது விதிமுறை கொண்டு வந்தாங்க.
என்னோட சேனலும் மானிட்டைஸ் ஆகிடுச்சி. போன வருஷம் யு டியூப்ல இருந்து முதல் முறையா 9,000 ரூபாய் வருமானம் வந்துச்சு.
இன்ஸ்டாகிராம்லயும் வீடியோ போட ஆரம்பிச்ச பிறகு, ரீச் இன்னும் அதிகமாச்சு. பிக் அப் ஆன பிறகு சேனலையும் பார்த்துட்டு, ஐ.டி., வேலையும் பார்க்க முடியல.
ஒரு பிரேக் எடுக்கலாம்னு வேலையை விட்டேன். ஐ.டி.,யில 23,000 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். இப்ப மாசம் 1.50 லட்சம் ரூபாய் வரை சேனல்ல இருந்து சம்பாதிக்கிறேன்.
எதிர்காலத்துல, சோஷியல் மீடியாவுல இதே மாதிரி வருமானம் கிடைக்குமான்னு தெரியல. அதனால, கையில ஒரு வேலையை வெச்சிகிட்டு, சேனலையும் தொடர்ந்து நடத்தலாம்னு இருக்கேன். என் தோற்றம், குரலை வெச்சு, நெகட்டிவ்வா கமென்ட் பண்றவங்களும் இருக்காங்க.
சமைக்கிறது மட்டுமில்லாம, பொருட்களை சுத்தமா கையாள்றது, கிச்சனை ஆர்கனைஸ் பண்றது, வீட்டை அழகா பராமரிக்கிறதுன்னு நான் போடுற வீடியோக்களை பார்த்துட்டு, 'நாங்களும் அதை பாலோ பண்றோம்'னு பாசிட்டிவ்வா சொல்றவங்களும் இருக்காங்க.
தட்டிக் கொடுக்க பலர் இருக்கும்போது, நெகட்டிவ் கமென்ட்ஸ் நம்மளை என்ன பண்ணிடப் போகுது.
மொத்தம், 60 செகண்ட்ஸ் வர்ற ஒரு ஷார்ட்ஸ் வீடியோவை ஷூட் பண்ணி, எடிட் பண்ணி வாய்ஸ் ஓவர் கொடுக்க, கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம் ஆகிடும்.
பெரிய வீடியோக்கள் தயார் பண்ணும் போது, சில நாள் பொழுதே விடிஞ்சிடும். ஆனாலும், பிடிச்சதை பண்ணும்போது கஷ்டமே தெரியாது.

