/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஐ.டி., சம்பளத்தைவிட யு டியூப் சேனலில் அதிகம் சம்பாதிக்கிறேன்! இந்த தொழில்ல பெரிய அளவுல வளர்ந்து வரணும்!
/
ஐ.டி., சம்பளத்தைவிட யு டியூப் சேனலில் அதிகம் சம்பாதிக்கிறேன்! இந்த தொழில்ல பெரிய அளவுல வளர்ந்து வரணும்!
ஐ.டி., சம்பளத்தைவிட யு டியூப் சேனலில் அதிகம் சம்பாதிக்கிறேன்! இந்த தொழில்ல பெரிய அளவுல வளர்ந்து வரணும்!
ஐ.டி., சம்பளத்தைவிட யு டியூப் சேனலில் அதிகம் சம்பாதிக்கிறேன்! இந்த தொழில்ல பெரிய அளவுல வளர்ந்து வரணும்!
PUBLISHED ON : மே 19, 2024 12:00 AM

அமெரிக்காவில் இருந்தபடியே, 'கோமதிஸ் கிச்சன்' எனும் யு டியூப் சேனல் நடத்தி வரும் கோமதி: சாமானியர்களையும் தொழில் முனைவோராக மாற்றிய பெருமை யு டியூபுக்கு உண்டு.
அந்த வரிசையில், சமையல் திறனை முதலீடாக்கி, லட்சங்களில் சம்பாதிக்கும் எனக்கும் சிறப்பான இடமுண்டு. என் சேனலுக்கு, 30 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கின்றனர்.
வளர்ந்ததெல்லாம் திருச்சியில் தான். எங்கம்மா நல்லா சமைப்பாங்க. 'சமையல் தெரிஞ்சா எங்க போனாலும் பிழைச்சுக்கலாம்'னு சொல்லி, எனக்கும், எங்கக்கா, தங்கச்சிக்கும் சமைக்க கற்றுக் கொடுத்தார். எம்.பி.ஏ., படிச்சுக்கிட்டிருந்தபோது எனக்கு கல்யாணமாச்சு.
ஐ.டி., வேலையில் இருந்த என் கணவருக்கு, 2008-ல் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. 10 ஆண்டு களுக்கு முன், இந்த நாட்டில் வேலை செய்றதுக்கான ஒர்க்கிங் விசா வாங்குறதுலயும், அதை தக்க வெச்சுக்கிறதுலயும் எக்கச்சக்க சிரமங்களை எதிர்கொண்டேன்.
அதனால், நான் எதிர்பார்த்த ஐ.டி., வேலைக்கு போறது கேள்விக்குறியாச்சு. எனவே தான், யு டியூப் சேனல் துவங்கினேன்.
எனக்கு தெரிந்த சமையல் விஷயங்களை, மற்றவர்களுக்கு பயன்படுற வகையில் லைப்ரரி மாதிரி தொகுத்து வைக்கணும்கிற ஆசையில் தான், அந்த முயற்சியை கையில் எடுத்தேன்.
கேசரி, டீ, ரசம், சட்னின்னு அன்றாடம் தேவைக்கான உணவுகளை எளிதாக செய்வது பற்றிய வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டேன்.
'இதெல்லாம் யாருக்கும் செய்ய தெரியாத ரெசிப்பியா?' என்று கமென்ட்ஸ் வந்துச்சு. இந்த உணவுகளையும் செய்ய தெரியாத, அடிப்படையில் இருந்து சமையல் கத்துக்க நினைக்கிறவங்களுக்கும் என் சேனல் பயன் தரணும்னு நினைச்சேன்.
அதிக பட்சமாக, மீன் குழம்பு ரெசிப்பியை, 1.50 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். சேனல் துவங்கி, ஒன்றரை ஆண்டில், 10 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வந்தாங்க.
கேமரா ஸ்டாண்ட் வாங்கியது தவிர, வேறு எந்த முதலீடும் செய்யவில்லை. அதன்பின் தான், டிஜிட்டல் கேமரா வாங்கினேன்; பணம் செலுத்தி எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்த துவங்கினேன்.
பாட்டி, எங்கம்மா, மாமியார் சொல்லி கொடுத்த ரெசிப்பிகளையே அதிகளவில் பதிவிடுகிறேன்.
புதிதாக செய்து பார்க்கிற உணவுகளை, என் குடும்பத்தினர் நல்லாயிருக்குனு சொன்னா மட்டும் தான், சேனலில் செய்து காட்டுவேன்.
'நல்லா படிச்சுட்டு யு டியூப் நடத்துறியே'னு பலரின் கிண்டல் பேச்சுகளுக்கும் ஆளாகிஇருக்கேன். ஆனால், நான் எதிர்பார்த்த ஐ.டி., வேலைக்கான சம்பளத்தைவிட, யு டியூப்பில் அதிகமாகவே சம்பாதிக்கிறேன்.
என்னை பொறுத்தவரை என் சேனல், எனக்கான அங்கீகாரம். எனவே, பிடிச்சதை சரியாகவும், சிறப்பாகவும் செய்வது தான் வெற்றிக்கான வழி.
இந்த தொழில்ல பெரிய அளவுல வளர்ந்து வரணும்!
'மைக்ரோ கிரீன்ஸ்' உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள கடலுார் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி:
காய்கறிகள்,
கீரைகள், எண்ணெய் வித்துக்கள், பயறு, சிறுதானிய விதைகளை பிளாஸ்டிக்
டிரேக்களில் விதைப்பு செய்து, துளிர் நிலையில் அறுவடை செய்து, அவற்றை உணவாக
சாப்பிடும் முறை உலகம் முழுதும் தற்போது பரவி வருகிறது. இந்த உணவு
பொருட்கள், 'மைக்ரோ கிரீன்ஸ்' என அழைக்கப்படுகின்றன.
நான் இரண்டு வருஷமா, இதை முழு நேர தொழிலா செஞ்சுட்டு இருக்கேன். இதற்கு முக்கிய காரணமே என் மகள் தான்.
அவ
பிறந்தப்ப, ரொம்ப குறைவான எடையில இருந்ததால், நல்ல சத்தான உணவுகள்
கொடுத்தா தான், நல்லா ஆரோக்கியமாவும், திடகாத்திரமாவும் தேற்றிக் கொண்டு வர
முடியும்னு அதுக்கான உணவு தேடல்ல ஈடுபட்டேன்.
இணையதளம் மற்றும் சில புத்தகங்கள் வாயிலாக, மைக்ரோ கிரீன்ஸ் ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்து தெரிந்து கொண்டேன்.
பொதுவாக,
முளை கட்டிய உணவு பொருள்களில் சத்துக்கள் அதிகம் என சொல்வர். ஆனால்,
அதைவிடவும் மைக்ரோ கிரீன்ஸ் உணவுகள்ல பல மடங்கு சத்துக்கள் அதிகம்.
நான் கிராமத்துல பிறந்து வளர்ந்ததால், முளைப்பாரி தயாரிக்கும் முறையை பயன்படுத்தி, மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தி செஞ்சுட்டு இருந்தேன்.
எந்தெந்த
தாவரங்களுக்கு எவ்வளவு விதைகள் பயன்படுத்தினால், எவ்வளவு மகசூல்
கிடைக்கும், எந்தளவுக்கு சூரிய வெளிச்சம் தேவை, எந்த தாவரத்தை எத்தனையாவது
நாள் அறுவடை செய்யலாம் என, பலவிதமான நுட்பங்களை செய்ய செய்ய கற்றுக்
கொண்டேன்.
தற்போது, 100 வகையான மைக்ரோ கிரீன்ஸ் உற்பத்தி பண்ணி
விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். தற்போது இதில் மதிப்பு கூட்டப்பட்ட
பொருட்கள் தயார் செய்து, விற்பனை செய்றதுக்கான முயற்சிகளில்
இறங்கியிருக்கேன்.
அடை ரெடிமிக்ஸ், தோசை ரெடிமிக்ஸ், சூரியகாந்தி
மைக்ரோ கிரீன் ஸ்மூத்தி, மூலிகை மைக்ரோ கிரீன் சூப் ரெடிமிக்ஸ், வெந்தயம்
மைக்ரோ கிரீன் எண்ணெய், பேஸ்பேக் பவுடர் உட்பட இன்னும் பலவிதமான பொருள்கள்
தயார் செய்யலாம்.
மைக்ரோ கிரீன்ஸ் குறித்து மக்களிடம் பரவலான
விழிப்புணர்வும், புரிதலும் இல்லாததால், விற்பனையில் சில சமயங்களில்
நெருக்கடிகளை சந்திக்க வேண்டி உள்ளது.
அறுவடை செய்ய ஓரிரு நாள்
தாமதமானாலும் அதன் ஊட்டச்சத்துக்கள் மாறுபடும். ஒவ்வொரு பயிரையும்
துல்லியமாக கண்காணித்து அறுவடை செய்து, உடனடியாக விற்பனை செய்ய வேண்டும்.
வெயில், மழை சீரான நிலையில் இல்லாத சமயங்கள்ல விளைச்சல் பாதிக்கப்படும்.
இப்படி
பலவிதமான நெருக்கடிகள் இருந்தாலும்கூட, எல்லாத்தையும் வெற்றி கொண்டு, இந்த
தொழில்ல பெரிய அளவுல வளர்ந்து வரணும்கிறதுதான் என்னோட லட்சியம்.
தொடர்புக்கு:
63746 19870.

