/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
என்னோட இலக்கில் கவனம் செலுத்தி முன்னேறுகிறேன்!
/
என்னோட இலக்கில் கவனம் செலுத்தி முன்னேறுகிறேன்!
PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM

நிகழ்ச்சி தொகுப்பாளர், பிக்பாஸ் பிரபலம், இன்ஸ்டா இன்ப்ளுயென்ஸர், யு டியூபர் என, பல பரிமாணங்களை கொண்ட அனிதா சம்பத்:
எங்களுடையது நடுத்தர குடும்பம். சின்ன வயதில் நிறைய பேச்சு போட்டிகளில் கலந்துப்பேன். எங்க அப்பா மீடியாவில் வேலை பார்த்ததால், நியூஸ் வாசிக்கிறதை நேரில் பார்க்கும் வாய்ப்பு சின்ன வயதிலேயே எனக்கு கிடைத்தது. அப்பவே நானும் நியூஸ் ரீடர் ஆகணும்னு முடிவு செய்தேன்.
என் ஆர்வத்தை பார்த்துட்டு என் தமிழாசிரியர், பள்ளியில் நடக்கும் இறை வழிபாட்டில் செய்தி வாசிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார்.
உச்சரிப்பு, இடைவெளி விட்டு ஏற்ற, இறக்கங்களோட செய்தியை விவரிக்கிறது என, நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன்.
இன்ஜினியரிங் கடைசி ஆண்டு படிக்கும்போதே, நியூஸ் ரீடருக்காக மூன்று சேனல்களில் ஆடிஷன் போனேன். மூன்று இடங்களிலும் கூப்பிட்டாங்க; அதில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன்.
செய்தி வாசிப்பாளராக கரியர் துவங்கியபோது என்கிட்ட விதவிதமான டிரஸ் கிடையாது.
காலேஜ் படிக்கும் போதும் என்கிட்ட இரண்டு செட் டிரஸ் தான் இருந்துச்சு. அதை தான் மாத்தி மாத்தி பயன்படுத்துவேன்.
வேலைக்கு சேர்ந்த பின், சென்னை தி.நகரில், 100 ரூபாய்க்கு டிரஸ் வாங்கி போட்டுட்டு போவேன். அதுக்காக நான் வருத்தப்பட்டதில்லை.
படிக்கும்போதே டியூஷன் எடுக்கத் துவங்கினேன். நான் சம்பாதிக்கும் பணத்தில், எனக்கான அடிப்படை தேவைகளை நிறைவேத்திக்கிட்டேன்.
எங்க அம்மா காலையில் 4:00 மணிக்கு எந்திரிச்சு, இடைஞ்சலான பாத்ரூமில் உட்கார்ந்து துணி துவைக்கிறதை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதனால், நான் நியூஸ் ரீடராகி வாங்கிய சம்பளத்தில் ஒரு வாஷிங் மிஷின் வாங்கி கொடுத்தேன்.
சின்ன வயசுலயே வாடகை வீட்டில் தான் வாழ்ந்துருக்கேன். என் கணவர் பிரபாவும் அப்படி தான். கனவை துரத்தும்போது, அது நிஜமாகும்னு சொல்வாங்க.
இப்போது நிறைய கனவுகளோட நானும், என் கணவரும் சேர்ந்து எங்களுக்குன்னு ஒரு வீடு கட்டியிருக்கோம்.
நாங்க புது வீட்டுக்கு வந்த போது எங்க அப்பா இல்லாதது தான் பெரிய குறை. இப்போது, எங்க இரண்டு பேரோட அம்மாக்கள் தான் எங்க உலகம். அவங்களை ரொம்ப ஸ்பெஷலாக பார்த்துக்கிறோம்.
யு டியூப், சோஷியல் மீடியா, வி.ஜே.,-னு பல விஷயங்களில் கவனம் செலுத்த முடியுதுன்னா அதற்கு கணவர் தான் முக்கியமான காரணம்.
எதையும் பெருசா எடுத்துக்காமல், என்னோட இலக்கில் மட்டும் கவனம் செலுத்தி முன்னேறி போயிட்டே இருக்கேன்.

