/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கஷ்டப்பட்டா வாழ்க்கையில முன்னேறலாம்!
/
கஷ்டப்பட்டா வாழ்க்கையில முன்னேறலாம்!
PUBLISHED ON : ஆக 12, 2024 12:00 AM

சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும், லிஸ்ஸி ஆண்டனி:
சினிமாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லை; 'டிவி' கூட பார்க்க விட மாட்டாங்க. அதனால், நான் நடிகை ஆனதில் இருந்து தற்போது வரை என் குடும்பத்தார் அதிர்ச்சியில் தான் இருக்காங்க.
சிறு வயதில், ஏர் ஹோஸ்டஸ் ஆகணும்ன்னு ஆசைப்பட்டேன். மற்றபடி, போற போக்கில் வாழ்க்கை என்ன தருதோ அதை ஏற்று, சிறப்பாக செய்து மேல வர வேண்டும் என்று நினைக்கும் கேரக்டர் நான். 'காமர்ஸ்' படித்த நான், 'ஷிப்பிங்'கில் ஒரு வாய்ப்பு வந்ததும் அதற்குள் போனேன்.
ப்ளு ஸ்டார் படம் வந்த பின், உலகில் பல இடங்களில் இருந்தும் போன் செய்து பாராட்டினாங்க. மூன்று மாதத்திற்கு முன் குடும்பத்துடன் ஐரோப்பா சென்றிருந்தேன்.
அங்கிருந்த தமிழர்கள், என்னிடம் வந்து பேசிய போது, அது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சினிமாவால், 'ஓவர் நைட்'டில் ஒரு 'மேஜிக்' நடப்பதை நான் 'பீல்' பண்ணினேன்.
வாழ்க்கையில் எதுக்குமே, 'ஷார்ட் கட்' கிடையாது. கஷ்டப்பட்டா மட்டுமே மேல வர முடியும். அது மட்டும் தான் நிலைத்து நிற்கும். அது தான் நாம் போறதுக்கான சரியான பாதை. இதைத்தான் எனக்கு சொல்லி வளர்த்திருக்கின்றனர்.
என்னோட அப்பா, அம்மா, தம்பி எல்லாருமே அப்படி தான்; அதையே தான் நானும் நம்புறேன். குறிக்கோளே இல்லாமல் வாழ்வதில் உடன்பாடு கிடையாது. அதை, நேர் வழியில் கஷ்டப்பட்டு உழைத்து அடைய வேண்டும் என்பது தான் நான் கடைப்பிடிக்கும் தத்துவம்.
ரோட்டில் இறங்கி நடக்கிறோம்னா, எதிர்ல வர்றவன் இடிக்கப் போறான்னு நமக்கு முன்கூட்டியே தெரிந்து, நாம் ஒதுங்கிப் போய்டுவோம்.
அது போன்று தான் எப்போதுமே, 'சேப் ஸோன்'ல இருக்குற மாதிரி என்ன நான் பார்த்துக் கொள்வேன். சினிமான்னு கிடையாது; எந்த, 'இண்டஸ்ட்ரி'யா இருந்தாலும் அந்த, 'அலெர்ட்னெஸ்' எப்போதுமே இருக்கும்.
அதனால் என்னை ரொம்ப மரியாதையா தான் பார்க்கின்றனர்; மரியாதையா தான் நடத்துகின்றனர்.
இதில், 'சிங்கிள் வுமன்' என்பதெல்லாம் எதுவுமே இல்லை. ஒருத்தவங்களை, 'டார்கெட்' பண்ண முடிவு செய்துட்டா, அவங்க சிங்கிளா இருந்தாலும், 'மேரீடா' இருந்தாலும் அவங்களுக்கு அது, 'கன்சிடரேஷனே' கிடையாதுன்னு நினைக்கிறேன்.
எதுவாக இருந்தாலும், நம்ம பாதுகாப்பு நம்ம கிட்ட தான் இருக்கு... தட்டித் துாக்கிட்டு போயிட்டே இருக்கணும்... அவ்ளோ தான்.
இது தான் என் தாரக மந்திரம். 'இவங்ககிட்ட விளையாடக் கூடாது, இவங்களுக்கு மரியாதை கொடுத்தே ஆகணும்' என நினைக்கிற மாதிரி அவங்களை, 'பீல்' பண்ண வெச்சிடுவேன்!

