ADDED : டிச 19, 2025 03:59 AM
பகலிலும் எரியும் தெருவிளக்கு
உழவர்கரை பாலாஜி நகர், 5வது குறுக்கு தெருவில், இரவு, பகலாக தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணமூர்த்தி, உழவர்கரை. குடிநீர் வீணாகிறது முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெருவில், குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது.
வேதநாயகி, முத்தியால்பேட்டை.
மோசமான கடலுார் சாலை
அரியாங்குப்பம் முதல் கிருமாம்பாக்கம் வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கண்ணன், புதுச்சேரி.
சாலையில் மீன் கடைகள்
உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சரஸ்வதி, உப்பளம்.
குண்டும் குழியுமாக சாலை
வில்லியனுார் - உறுவையாறு சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
மணிகண்டன், வில்லியனுார்.

