PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன்சம்பத் பேச்சு: சினிமாவைப்
போல, பிரமாண்டமாக மாநாடு நடத்தி, விஜய் அவருக்கு எழுதிக்கொடுத்த
வசனங்களை பேசினார். தி.மு.க., தற்போது, விஜய்க்கும், சீமானுக்கும்
இடையே சண்டையை துாண்டி விட்டுள்ளது. வரும் 2026 தேர்தல், இரு
சித்தாந்தங்களுக்கான
தேர்தலாக இருக்கும். திராவிட மாடல் செயல்பாடுகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்க, ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலர் ஈஸ்வரன் பேச்சு: த.வெ.க., தலைவர் விஜய், 50 பேரை அலுவலகம் அழைத்து, வெள்ள நிவாரணம் கொடுத்தது,'ஷூட்டிங்' இல்லை. ஆனால்,வெள்ளம் பாதித்த இடங்களைஆய்வு செய்து நிவாரணம் வழங்கினால், 'போட்டோ ஷூட்' என்கிறார். அதனால் விஜய் சொல்வது அத்தனையும்பொய். சினிமாவில் நடிப்பதைப்போன்று, அரசியலிலும் அவர்நடிக்கிறார்.
விஜயை பார்க்கக் கூடுற கூட்டத்தால ஏதாவது அசம்பாவிதம்நடந்துட்டா, அதுக்கு வேற தனியா நிவாரணம் தரணுமே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: பா.ஜ.,வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நாங்கள்,தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை ஒழித்துவிட்டு, நல்ல ஆட்சியைக் கொண்டு வருவோம். அ.தி.மு.க.,வை பழனிசாமி அபகரித்ததில் இருந்தே, கட்சியில் ரகளைதான். இவ்வளவு நாள், வெளியே தெரியாமல் இருந்தது. இப்போது தெரிய வந்துள்ளது.கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்து தானே ஆகணும்.
ஜெ., காலத்துல கட்டுக்கோப்பா இருந்த கட்சி, காங்., பாணிக்கு மாறும்னு யாரும் நினைத்திருக்கமாட்டாங்க!
கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் பேட்டி:- கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல, முதல்-வர்ஸ்டாலினை சந்திக்க உள்ளோம். கட்டுமானப் பொருட்களுக்கு 18 சதவீதமும்,சிமென்டிற்கு 28 சதவீதமும்ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும் அல்லது 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
மத்திய நிதி அமைச்சரிடம்சொல்ல வேண்டிய இந்த கோரிக்கையை, முதல்வரிடம்சொல்லி என்ன செய்யப் போகிறார்?

