PUBLISHED ON : டிச 11, 2024 12:00 AM

தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'லண்டனில் சென்று படித்த,11 பேரில் ஒருவர் தான் அண்ணாமலை. அவரை
மட்டும் பெரிதுபடுத்தி முக்கியத்துவம்ஏன்?' என, அமைச்சர்
செந்தில் பாலாஜி கேட்டுள்ளார். படிக்க 11 பேர்
சென்றிருந்தாலும்,அதில் புகழ் பெற்றவர் சென்றதால்,
முக்கியத்துவம் பெற்றது. ஆனால், பல ஆயிரம் பேர் சிறைக்கு
சென்றிருந்தாலும், செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் அதிகமாக
இருந்தது ஏன்?
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்அறிக்கை: இந்தியாவில் யாராகஇருந்தாலும், பிறப்பால் எந்தஅரசு பதவியையும் பெற முடியாது; தேர்தலை சந்தித்துதான் பதவிக்கு வர முடியும்.பிறப்பின் அடிப்படையில்,கட்சியில் தான் பதவி கொடுக்கமுடியும்; அரசாங்கத்தில், பிறப்பின் அடிப்படையில் பதவிகொடுக்க முடியாது. வரலாறு புரியாதவர்கள் தான், மன்னராட்சி குறித்து பேசுவர்.
மன்னராட்சி பட்டியலில் இவரும் தான் இருக்காரே!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழகஅரசு, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்காமல்இருக்க, உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ள தவறுகிறது. மூன்று ஆண்டுகளாக சிறுமியர்,பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் தொடர்கின்றன.இதற்கெல்லாம் காரணம், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கைகள் முறையானதாகஅமையவில்லை. பெண்களுக்குஎதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு துாக்கு தண்டனை கிடைக்கக்கூடிய நிலை ஏற்பட்டால், இது போன்றகொடுமை நடக்காது.
துாக்கு தண்டனைக்கெல்லாம் மத்திய அரசு தானே சட்டம் இயற்றணும்... அங்க இவர் வலியுறுத்தலாமே!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: பல் மருத்துவ துறையில், 60 பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன. பல் டாக்டர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நடத்தவில்லை. தமிழகத்தில் புதிதாக பல் டாக்டர்களை அரசு நியமிக்கவில்லை. மக்களுக்கு பல் மருத்துவ சேவை எளிதாக கிடைக்க, அங்கு போதிய எண்ணிக்கையில்பல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் பல் மருத்துவமனைகளை வாழ வைக்க அரசு நினைக்குதோ என்னமோ?

