PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க, மருத்துவ அணி மாநிலஇணை செயலருமான டாக்டர் சரவணன் பேச்சு:
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'நான் பிரெஞ்சை தான் மொழி பாடமாக எடுத்து படிக்கிறேன். தமிழை மொழிப் பாடமாக எடுக்கவில்லை' என, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷின் மகன் கவின் கூறியுள்ளார். அவரது மகன் உண்மையை பேசிஇருக்கிறார்.
'மகன் உண்மை பேசிஇருக்கிறார்' என்றால், 'அப்பா உண்மையே பேச மாட்டார்'னு சொல்ல வர்றாரா?
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலர் பிரகாஷ் பேச்சு: கடந்த, 2022ல், தளி ஒன்றிய செயலர் திருமண விழாவிற்கு வந்த இளைஞரணி செயலர் உதயநிதியிடம், 'அடுத்த முறை நீங்கள், எங்கள் மாவட்டத்திற்கு வரும்போது அமைச்சராக வருவீர்கள்' என்றேன்; அது நடந்தது. அதுபோல், 2023ல் மேற்கு மாவட்ட துணை செயலர் இல்ல திருமண விழாவிற்கு அமைச்சராக வந்த உதயநிதியிடம், 'அடுத்த முறை துணை முதல்வராக வருவீர்கள்' என்றேன். அதுவும் நடந்து விட்டது.
அடுத்த, 'புரமோஷன்' முதல்வர் பதவி தானே... அடுத்து உதயநிதி வர்றப்ப, அதையும் சொல்லிடுங்க... ஆனா, அதை முதல்வர் ஸ்டாலின் எப்படி எடுத்துக்குவார்னு தான் தெரியல!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலர் முரளி அப்பாஸ்பேட்டி: 'உலக நாயகன்' பட்டத்தை தவிர்க்கும்படி கமல்வெளியிட்ட அறிக்கையை, தி.மு.க.,வின் மிரட்டலால் தான் பட்டத்தை துறந்ததாக, அரை வேக்காட்டுத்தனமாக தமிழிசை விமர்சித்துள்ளார். கமல், யாருடையமிரட்டலுக்கும் அஞ்சுபவர்அல்ல; மிரட்டலுக்கு பணிபவரும் அல்ல.
விஸ்வரூபம் பட பிரச்னையை எதிர்கொள்ள பயந்து, 'நான் நாட்டை விட்டே போறேன்'னு கமல் சொன்னது ஏன்?

