PUBLISHED ON : நவ 08, 2024 12:00 AM

தமிழக
சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன்:பிற மாநிலங்களே பாராட்டும்படி,
முதல்வர்ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்கள்
குறைகளை கண்டறிந்து தீர்வு காணும்படி, மக்கள் சந்திப்பு திட்ட முகாம்
நடந்து வருகிறது.இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய தீர்வு
காணப்படும்.
இவரது தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்கு வரும் முன்பே, சட்டசபை தொகுதிவாரியா போய் வாங்கிய மனுக்களுக்கு எல்லாம் தீர்வு கண்டாச்சா?
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி:
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில் மருத்துவத் துறையில், 7,500-க்கும்
மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. விரைவில்,1,066 சுகாதார
ஆய்வாளர்கள்,2,250 கிராமப்புற செவிலியர்கள், 2,253 மருத்துவர் பணியிடங்களை
நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
ஆனா, கொரோனா காலத்தில் பணியாற்றி காலமான, டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு மட்டும் இன்னும் அரசு பணிதராதது ஏன்?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: கோவையில், முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் பாடப்படவில்லை. ஏன் இரண்டு கீதங்களும் பாடப்படவில்லை என்ற ரகசியம் புரியவில்லை. ஒருவேளை, இவர்கள் விதிவிலக்கு பெற்றுள்ளனரா அல்லது ஜோதிடர்கள் பாடக்கூடாது என சொல்லி விட்டனரா. தெரிந்தவர்கள், முதல்வரிடம் கேட்டு சொல்லுங்கள்.
அந்த அரசு நிகழ்ச்சிகளில், இவங்க கட்சி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும் கலந்துக்கிட்டாங்களே... அவங்களே, இந்தசந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்தி இருக்கலாமே!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை:மகளிருக்கு, 1,000 ரூபாய் மாத உரிமைத் தொகை திட்டத்தால், பெண்கள் ஆதரவை தி.மு.க., வசப்படுத்தி உள்ளது. படித்தவர்கள்மத்தியில் பா.ஜ., மற்றும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கூடுதல்ஆதரவு. மாணவர்கள், இளைஞர்கள், முதல்முறை ஓட்டளிக்கும் இளம் தலைமுறைவாக்காளர்கள் விஜயை ஆதரிக்க வாய்ப்பு. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, இளைஞர்களை ஈர்க்கும்வழியற்று, ஜெ.,க்கு பிறகு பெண்கள் ஆதரவையும் இழந்து, முதியோர் முகமாக காட்சி அளிக்கிறது. என்ன செய்வது... மாளிகையே ஆனாலும் பராமரிப்பு இல்லாவிட்டால், அது பாழடைந்த பங்களா தானே.
அப்புறம் ஏன், அந்த பாழடைந்த பங்களாவுக்குள்ள மீண்டும் குடிபோகணும்னு துடியா துடிக்குறீங்க?

